• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்!

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
விமானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த இந்திய வம்சாவளி இளம்பெண்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஜூன் 20 அன்று புதுடெல்லி வழியாக பஞ்சாப்பில் உள்ள தனது வீட்டிற்குச் செல்ல ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே சர்வதேச குவாண்டாஸ் விமானத்தில் உயிரிழந்தார்.

24 வயதான இந்திய வம்சாவளி சேர்ந்த பெண்ணான மன்ப்ரீத் கவுர், பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற ஆசையுடன் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவில் சமையல் படிப்பு படிக்கச் சென்றுள்ளார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டிருந்தார். அதன்படி மெல்போர்னில் இருந்து டெல்லிக்கு செல்லும் விமானத்தில் ஏறியுள்ளார். ஆனால் விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை அணிய முயன்றபோது திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சீட் பெல்ட் இறுக்கியதால் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய ஊடகத்தின்படி, தனது சீட் பெல்ட்டை இறுக்கமாக கட்டியபோது, ​​ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று கூறியுள்ளது.

விளம்பரம்

விமான நிலையத்திற்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மன்பிரீத் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக அவரது நண்பர்கள் ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு தெரிவித்தனர். எனினும், விமானத்திற்குள் வந்த அவர், விமானம் புறப்படும் முன் அணியக்கூடிய சீட் பெல்ட்டை அணிந்தபோது, திடீரென மயங்கி சரிந்து விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்றும் கூறியுள்ளனர்.

மன்பிரீத் மயங்கி விழுந்த அதே சமயம், விமானம் மெல்போர்னில் இருந்து புறப்பட தயாராக இருந்தது. இதுபற்றி தெரியவந்ததும், உடனடியாக விமான ஊழியர்களும், அவசரகால பணியாளர்களும் உதவிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் அவர்களால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மன்பிரீத் காசநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இது பெரும்பாலும் நுரையீரலை பாதிக்கும் ஒரு தொற்று நோய் என்றும், அந்த நோயினால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என்றும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

இதையும் படிக்க:  
உலகிலேயே தங்கம் அதிகம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா? இந்தியாவின் நிலை?

சிறந்த சமையல் கலைஞராக வேண்டும் என்ற நோக்கங்களுடன் ஆஸ்திரேலியாவில் சமையல் கலையை படித்து வந்தார். படிக்கும்போதே வேலை செய்து தனது செலவுகளை அவர் கவனித்து வந்துள்ளார். விமானத்தில் ஏறியபோது சீட் பெல்ட் போட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். விமானம் புறப்படுவதற்கு சற்று முன், அவள் சீட்டில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள் என்று அவரது நண்பர் குர்திப் கிரேவால் ஹெரால்ட் சன் பத்திரிகையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

இதையும் படிக்க:
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நுழையும் முதல் தமிழ் பெண் உமா குமரன்

இதற்கிடையில் அவரது நண்பர் கிரேவால், மன்பிரீத் கவுரின் குடும்பத்திற்கு உதவுவதற்காக GoFundMe பக்கம் ஒன்று உருவாக்கியுள்ளார். அதில், “வணக்கம், என் பெயர் குர்திப் கிரேவால், மன்பிரீத் கவுரின் குடும்பத்திற்கு நிதி திரட்டி வருகிறேன். அவள் என் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவி, தனது சொந்த நாட்டிற்கு வர முயன்றபோது மெல்போர்ன் விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு முன் விமானத்தில் உயிரிழந்துள்ளார்” என்று கிரேவால் பதிவில் கூறியுள்ளார்.

விளம்பரம்

.

Read More

Previous Post

நாள்தோறும் வளரும் அதிசய சிவலிங்கம்… கடவுளை நேரே தரிசிக்கும் மக்கள்… நம்ம இந்தியாவில் எங்கு இருக்கு தெரியுமா?

Next Post

கார் மோதி மலாயன் புலி பலி | Makkal Osai

Next Post
கார் மோதி மலாயன் புலி பலி | Makkal Osai

கார் மோதி மலாயன் புலி பலி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin