வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜப்பான் முன்னாள் பிரதமர் Fukuda Yasuo தலைமையிலான குழுவினரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ஜப்பான் – இலங்கை சங்கத்தின் தலைவர் சசாகி மிகியோ, மிட்சுபிஷி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த சந்திப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, இலங்கை மற்றும் ஜப்பானுக்கிடையிலான இருதரப்பு உறவை குறிப்பாக பொருளாதாரத் துறையில் மேம்படுத்துவது மற்றும் அதிக ஜப்பானிய முதலீட்டை நாட்டிற்கு வழங்குவது குறித்து கலந்துரையாடியதாகவும் கூறினார்.
இலங்கையின் நீண்டகால நண்பரான முன்னாள் பிரதமர் ஃபுகுடா யசுவோ இலங்கை-ஜப்பான் இருதரப்பு உறவுகளை சீராக மேம்படுத்துவதில் ஆர்வத்துடன் செயல்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
The post அமைச்சர் அலி சப்ரி-ஜப்பான் முன்னாள் பிரதமர் சந்திப்பு appeared first on Thinakaran.

