• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

புதிய பிரதமரானார் கீர் ஸ்டார்மர் – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
July 6, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
புதிய பிரதமரானார் கீர் ஸ்டார்மர் – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு மேற்பட்ட இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றிபெற்றிருக்கும் நிலையில் கீர் ஸ்டார்மர் பிரிட்டனின் புதிய பிரதமரானார்.

பிரிட்டன் பாராளு மன்றத்தில் மொத்தம் உள்ள 650 தொகுதிகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (லிபரெல் டெமோ கிராட்ஸ் கட்சி) ஆகியவை வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலை எதிர்கொண்டன.

முன்னதாக பெரும்பாலான பிரதமர் ரிஷிசுனக் தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி கடுமையான தோல்வியை சந்திக்கும் எனவும் பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் கூறப்பட்டு இருந்தது.

விளம்பரம்

பிரிட்டன் நேரப்படி இரவு 10 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் துவக்கம் முதலே தொழிலாளர் கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. 650 இடங்களுக்கு நடைபெற்ற இத்தேர்தலில், ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 326 இடங்கள் தேவை. ஆனால், கன்சர்வேட்டிவ் கட்சியால் வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதையடுத்து ஆட்சியை இழந்த ரிஷி சுனக், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

விளம்பரம்

அதே சமயம், கீர்ஸ்டார்மரும் தான் போட்டியிட்ட தொகுதியில் அமோக வெற்றி பெற்றார். தொழிலாளர் கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அரியணை ஏறியது.

UK Election Result 2024 Live: Starmer met King Chalres at Buckingham Palace

தொழிலாளர் கட்சி கட்சியின் தலைவர் கீர் ஸ்டார்மர், பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தித்து ஆட்சியமைக்க உரிமைய கோரிய நிலையில், அவரை பிரதமராக சார்லஸ் நியமித்தார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஸ்டார்மர், ரிஷி சுனக்கின் சாதனை மற்றும் முயற்சிகளை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்று பாராட்டினார்.

விளம்பரம்

தொடர்ந்து பேசிய அவர், தங்கள் ஆட்சியில் நாட்டின் நலனுக்கே முதலிடம் என்று கூறினார். ஒரு சுவிட்சை தட்டினால் நாட்டில் மாற்றம் ஏற்பட்டு விடாது என்று கூறிய அவர், நிச்சயம் மாற்றத்திற்கான பணி உடனடியாகத் தொடங்கப்படும் என்று கூறினார்.

துணை பிரதமராகும் ஏஞ்செலா ரேனர்

புதிய பிரதமராக கியெர் ஸ்டார்மர் பொறுப்பேற்க உள்ள நிலையில், துணை பிரதமராக ஏஞ்செலா ரேனர் (Angela Rayner) பதவியேற்கிறார். இது போன்று துணை சான்சலராக ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves), பாதுகாப்பு துறை அமைச்சராக ஜான் ஹீலே(John Healey), வெளியுறவுத்துறை அமைச்சராக டேவிட் லேம்மி(David Lammy) தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

இந்நிலையில் இங்கிலாந்து தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழையும் முதல் தமிழர் என்ற பெருமையை உமா குமரன் பெற்றுள்ளார்.

பிரிட்டனில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இங்கிலாந்தில் இதுவரை எந்த கட்சியும் தொடர்ந்து 5 ஆவது முறை ஆட்சி அமைத்ததில்லை. அந்த வரிசையில், 4 முறை தொடர்ந்து அரியணையில் அமர்ந்திருந்த கன்சர்வேட்டிவ் கட்சியும் தற்போது தோல்வியை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 14 ஆண்டுகளுக்கு பிறகு தொழிலாளர் கட்சி பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ளது பிரக்சிட் எனப்படும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் நாடு வெளியே வந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

டி20-ல் இந்தியா – ஜிம்பாப்வே இன்று மோதல் | India vs Zimbabwe 1st T20I

Next Post

9 pusat undi mula dibuka jam 8 pagi | Makkal Osai

Next Post
9 pusat undi mula dibuka jam 8 pagi | Makkal Osai

9 pusat undi mula dibuka jam 8 pagi | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin