ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தாம் வகிப்பதாகக் கூறி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சி தலைமையகத்துக்கு முன்பாக நேற்று (05) பதவியேற்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை கட்சி தலைமை அலுவலகத்துக்குள் செல்ல பொலிஸார் அனுமதிக்காததால், கட்சி தலைமை அலுவலகம் முன்பு அவர் இவ்வாறு கையெழுத்திட்டு பதவியேற்றார். இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்கு அருகில் நேற்று பொலிஸார் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று (05) காலை கொழும்பு டார்லி வீதியிலுள்ள தனது கட்சித் தலைமையகத்துக்கு வருமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கட்சியின் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

