உலக சந்தை பால் உற்பத்தியில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக கொண்டு செல்ல படித்த இளைஞர்கள், பெண்கள், தொழில் முனைவோர்கள் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு முன் வருவோர்க்கு பால்வளத்துறை உறுதுணையாக செயல்படும். பல்வேறு துறை சார்ந்த திட்டங்களின் மானியங்களை ஒருங்கிணைத்து குறிப்பாக தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர்களுக்கு திட்ட மதிப்பீட்டில் 30% அல்லது (ரூ.2,25,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும். மேலும், பழங்குடியினருக்கு திட்ட மதிப்பீட்டில் 50% அல்லது (ரூ.3,75,000) இதில் எது குறைவோ மானியமாக வழங்கப்படும்.

