யுக்திய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் இரண்டாம் கட்ட நடவடிக்கையின் போது 24 மணித்தியாலங்களுக்குள் 1403 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 57 பேர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கைதானவர்களில் 1340 ஆண்களும் 63 பெண்களும் அடங்குகின்றனர். (a)

