• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மலேசியா-சீனா 50வது ஆண்டு நிறைவு விழா: பெய்ஜிங்கிற்கு 15,000 கிமீ சைக்கிள் பயணம் செல்லும் ஓய்வு பெற்றவர்கள் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 5, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
மலேசியா-சீனா 50வது ஆண்டு நிறைவு விழா: பெய்ஜிங்கிற்கு 15,000 கிமீ சைக்கிள் பயணம் செல்லும் ஓய்வு பெற்றவர்கள் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பேங்காக்: ஷா ஆலமைச் சேர்ந்த 73 வயதான டெங் சூன் குவாங் 73, பேராக்கை சேர்ந்த அவரது சைக்கிள் ஓட்டுநர் நண்பரான தியோங் டிங் மிங் 72 ஆகிய இருவரும்  பணி ஓய்வு பெற்றவர்களாவர். பகாங் பெந்தோங்கில் இருந்து பெய்ஜிங் தியெனன்மென் சதுக்கத்திற்கு சென்றடைந்துள்ளனர். இவர்கள்  15,000 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை சைக்கிளில் கடந்துள்ளனர். 1974 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி நிறுவப்பட்ட மலேசியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50ஆவது ஆண்டு நிறைவை அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

50ஆவது ஆண்டு நிறைவு மலேசியா-சீனா உறவுகளில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கும் அதே வேளையில் பயணம் எப்போதும் சுமூகமாக இருக்காது என்பது போல் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சுமுகமாக உறவில் இணைந்து பயணிக்கிறது. அக்டோபர் 1 ஆம் தேதி சீனா தனது 75 ஆவது தேசிய தினத்தை கொண்டாடும் முன், செப்டம்பர் 30 ஆம் தேதி பெய்ஜிங்கிற்கு வருவதே அவர்களின் இலக்கு என்று அவர் கூறினார். தற்காலிகமாக, சீனாவில் உள்ள மலேசியத் தூதரக அதிகாரிகளை நாங்கள் தியனன்மென் சதுக்கத்திற்குச் செல்வதற்கு முன் சந்திப்போம் என்று அவர் கூறினார். தானும் தியோங்கும் சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் என்றும் அவர்கள் அடிக்கடி சைக்கிளில் பயணம் செய்து எல்லைகளைக் கடந்தவர்கள் என்றும் டெங் கூறினார்.

நாங்கள் பல ஆண்டுகளாக வழக்கமான சைக்கிள் ஓட்டுபவர்களாக இருக்கிறோம். பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் இயற்கையின் அழகை ரசிப்போம். மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அழகிய நட்பை பரப்புவோம். முடிவில்லா வாழ்க்கையை அடையாளப்படுத்துவோம் என்று அவர் கூறினார். ஜூன் 30 அன்று, டெங் மற்றும் தியோங்கின் சைக்கிள் பயணத்தை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லீவ் சின் டோங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மலேசியா-சீனா நட்புறவு சங்கத்தின் தலைவர் டத்தோ அப்துல் மஜித் கான் மற்றும் மூத்த அரசியல்வாதி டான்ஸ்ரீ லிம் கிட் சியாங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜூலை 4 அன்று, அவர்கள் கிளந்தனில் உள்ள பெங்கலன் குபோரிலிருந்து தாய்லாந்தின் தெற்கு மாகாணமான நாரதிவாட் வரை எல்லையை கடந்தனர். ஆனால் பலத்த இடியுடன் கூடிய கனமழை அவர்களின் பயணத்தை மெதுவாக்கியது. இதனால் அவர்கள் ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் இரவைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

Previous articleபோலி கடப்பிதழ் கும்பல் முறியடிப்பு: மூளையாக செயல்பட்டதாக நம்பப்படும் வங்காளதேச ஆடவர் கைது
Next articleதாப்பாவில் சமூக மையம் புதுப்பிப்பு அது எச்ஆர்டி கார்ப் முடிவு; டத்தோஸ்ரீ சரவணன்



Read More

Previous Post

அனைத்து சமூக வலைதளங்களுக்கும் 6 நாட்கள் தடை @ பாகிஸ்தான் | 6 days ban on all social media in Pakistan Punjab

Next Post

சிங்கப்பூரில் மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

Next Post
சிங்கப்பூரில் மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

சிங்கப்பூரில் மெர்லியன் சிலையை புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாதா!! எப்போது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin