இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுவதானால், இந்தியாவின் உள்கட்டமைப்பை மாற்றியமைத்தமை ஒரு முக்கிய அம்சமாக வெளிப்பட்டுள்ளது. விரிவான மோட்டார் வாகன வலைப்பின்னல்கள் முதல் நகர்ப்புற மெட்ரோ ரயில் பாதைகள் வரை, இந்தியா தற்போது குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டுள்ளது.
இருப்பினும், இந்த வெளிப்படையான முன்னேற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் பொருளாதார எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமான துறைகளில் அமைதியான புரட்சி நடந்து வருகிறது. அவ்வாறு உலக வர்த்தகத்தை நோக்கிய முக்கிய வாயிலாக இந்தியாவின் துறைமுகங்கள் அமைகின்றன.
துறைமுக கொள்ளளவு மற்றும் இயல்திறன் என்பன குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. உற்பத்தி மற்றும் ஏற்றுமதி எரிசக்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டுமென்ற மக்களின் நோக்கங்களுக்கு தற்போது அடித்தளமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் வர்த்தகத்தின் பெரும்பங்குக்கு கடல்சார் வர்த்தகமே காரணம் என்பதால், உலகத்தரம் வாய்ந்த துறைமுகங்களின் தேவை மிக முக்கியமாக அமைகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் இந்த முன்னேற்றம் இரண்டு மடங்குக்கும் மேலாக அதிகரித்திருப்பது கண்கூடாகத் தெரிகிறது.
உதாரணமாக, மும்பையின் துறைமுகத்தின் குறுக்கே நவா ஷெவா அமைந்துள்ளது. 1989- இல் நிறுவப்பட்ட நவீன வசதி ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (Jawaharlal Nehru Port Authority – JNPA) இந்தியாவின் துறைமுக மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
துறைமுக செயல்திறனில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். DP வேர்ல்ட் மற்றும் MEERSK போன்ற தனியார் நிறுவனங்கள் பெரிய துறைமுகங்களில் கொள்கலன் முனையங்களை நிர்வகிக்கின்றன. கூடுதலாக, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சுங்க நடைமுறைகளை நவீனமயமாக்குதல் ஆகியவை ஏற்பியல் போக்குவரத்தை நெறிப்படுத்தி, உலக அரங்கில் இந்தியாவின் போட்டித் தன்மையை மேம்படுத்தியுள்ளன.
இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், இந்தியாவின் கடல்சார் தொழில் உலக அளவில் பின்தங்கியுள்ளது. கலாத்தியா விரிகுடாவில் ஒரு கடல்சார் மையம் மற்றும் துறைமுக விரிவாக்கத்திற்கான இலட்சியத் திட்டங்கள் ஆகியவை புதிய பாதையை உருவாக்குவதில் இந்தியாவின் உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இருப்பினும், பெரிய கப்பல்களுக்கு இடமளிக்கும் வகையில் ஆழமான துறைமுகங்களின் தேவை முதலான சவால்களும் எதிர்நோக்கப்படுகின்றன.
இருப்பினும், இந்தத் துறைமுக மறுசீரமைப்பின் முக்கியத்துவமானது வர்த்தக வசதிக்கு அப்பாற்பட்டது. உள்கட்டமைப்பு மற்றும் ஒழுங்குமுறை எளிமைப்படுத்தலில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் விரிவான பொருளாதார மாற்றத்துக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
2047 ஆம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கான தனது பயணத்தை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், துறைமுக சீர்திருத்தங்களின் வெற்றி நம்பிக்கைக்குரிய கலங்கரை விளக்கமாக அமைகிறது. இந்தியா தனது துறைமுகங்களை மறுசீரமைத்து அபிவிருத்தி அடையச் செய்தால், அது தனது பொருளாதாரத்தில் இது போன்ற மாற்றங்களுக்கான இயல்திறனை அடையாளம் கண்டு, அனைவருக்கும் வளர்ச்சி மற்றும் வளம் என்ற புதிய சகாப்தத்தை உருவாக்க அதிக வாய்ப்புள்ளது.
The post துறைமுகங்களின் வினைத்திறன் அதிகரிப்பினால் இந்தியாவில் துரிதமான பொருளாதாரப் புரட்சி appeared first on Thinakaran.

