ஜப்பான் அரசாங்கம் Floppy Disk (நெகிழ் வட்டு) பயன்பாட்டை முற்றாக கைவிட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இதன் பயன்பாடு உச்சம் பெற்றிருந்த நிலையில் அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும் அது நீக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மாதம் வரை, காலாவதியான இந்த Floppy Disk பயன்படுத்தி அரசுக்கு ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு மக்கள் கோரப்பட்டு வந்தனர். 1,000க்கும் அதிகமான ஒழுங்கு முறை தேவைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விதி தற்போது நீக்கப்பட்டு விட்டதாக டிஜிட்டல் அமைச்சர் டாரோ கோனோ தெரிவித்துள்ளார்.
இந்த Floppy Disk அகற்றும் அறிவிப்பை 2021 ஆம் ஆண்டிலேயே கோனோ வெளியிட்டிருந்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் போரில் நாம் வெற்றி பெற்றோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
1960களில் சதுர வடிவத்தில் உருவாக்கப்பட்ட சேமிப்புக் களஞ்சியமான Floppy Disk 1990 களில் மிக முக்கிய சாதனமாக மாறியது. அதிக உச்ச திறன் கொண்ட Floppy Disk வெறுமனே 1.44 MB தரவை மாத்திரமே சேமிக்கும்.
சோனி நிறுவனம் இதன் உற்பத்தியை 2011இல் கைவிட்டது.

