ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது ரசிகர்களின் கேலி கிண்டலுக்கு ஆளான ஹர்திக் பாண்ட்யாவை தற்போது அதே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த பாண்ட்யா இப்போது நேஷ்னல் ஹீரோக்களில் ஒருவராக மாறியுள்ளார்.
நடந்த முடிந்த ஐபிஎல் தொடரின்போது குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யாவை மும்பை அணி நிர்வாகம் சுமார் 15 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது. அதேநேரம் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மா அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் இயல்பாகவே ஹர்திக் பாண்ட்யா மீது கோபத்தை வெளிப்படுத்த தொடங்கினர். அத்துடன், ஹர்திக் பாண்ட்யாவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால், அவரை மைதானத்திலும், சமூக வலைதளங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்தனர்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய மும்பை அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதன்பின்னர், உலகக்கோப்பை டி20 அணிக்காக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதுடன், அவரை துணை கேப்டனாக நியமித்தது எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியதைப் போல் அமைந்தது.
இத்தகைய கடும் நெருக்கடிக்கு மத்தியில் உலகக்கோப்பை தொடர் முழுவதும் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டி20 உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடிய ஹர்திக் பாண்டியா, 144 ரன்கள் குவித்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.குறிப்பாக இறுதிப் போட்டியில் பாண்ட்யா வீழ்த்திய 3 விக்கெட்டுகள் மற்றும் கட்டுக் கோப்பான கடைசி ஓவர் வீச்சு ஆகியவை வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. இதனால், தற்போது தேசிய அளவில் இந்திய ரசிகர்கள் நேசிக்கும் வீரராக மாறியுள்ளார் ஹர்திக் பாண்ட்யா.
Rohit praising hardik and sky for that Miller wicket pic.twitter.com/K87VMz8UKl
— ADARSH (@Adarshdvn45) July 4, 2024
இந்நிலையில், இந்திய அணியின் உலகக்கோப்பை வெற்றிக் கொண்டாட்டம் இன்று மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. அப்போது கேப்டன் ரோஹித் சர்மா பேசிய போது இந்த வெற்றி ஒட்டுமொத்த இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காக நாங்கள் மிகவும் போராடினோம். மிகவும் இக்கட்டான சூழலில் கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவிற்கு நன்றி என்றார். அப்போது வான்கடே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஹர்திக், ஹர்திக் என்ற கோஷம் அரங்கையே அதிரவைத்ததது. 2 மாதங்களுக்கு முன்பாக, ஹர்திக் பாண்டியாவை அங்கு கிண்டல் செய்த அதே ரசிகர்கள், இன்று அவரை கதாநாயகனாக கொண்டாடி மகிழ்கின்றனர். இது தொடர்பான மீம்ஸ் மற்றும் வீடியோக்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)