• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சம்மன்!

GenevaTimes by GenevaTimes
July 4, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
பாலியல் வழக்கில் எடியூரப்பாவுக்கு சம்மன்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மீது சுமத்தப்பட்டிருந்த பாலியல் வழக்கு தொடர்பாக ஜூலை 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, சதாசிவ நகா் காவல் நிலையத்தில் பெண் ஒருவா் தாக்கல் செய்திருந்த புகாரில், பெங்களூரு, டாலா்ஸ் காலனி இல்லத்தில் பிப். 2-ஆம் தேதி முன்னாள் முதல்வா் எடியூரப்பாவைச் சந்தித்த போது, தனது 17 வயது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனடிப்படையில், பாஜக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டப்பிரிவு 8, இந்திய தண்டனை சட்டப்பிரிவு 354ஏ-இன்படி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சிஐடி) மாற்றி மாநில டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.

ஜூன் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகாததால், எடியூரப்பாவைக் கைது செய்ய கைது ஆணை பிறப்பிக்குமாறு பெங்களூரில் உள்ள முதலாம் விரைவுநீதிமன்றத்தை சிஐடி ஜூன் 13-ஆம் தேதி அணுகியிருந்தது. அதன்பேரில், எடியூரப்பாவைக் கைது செய்ய ஜாமீனில் வெளியே வரமுடியாத ஆணை பிறப்பித்து ஜூன் 13-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனிடையே, தன் மீது பதிவுசெய்யப்பட்டுள்ள போக்ஸோ வழக்கை ரத்து செய்யக் கோரி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் எடியூரப்பா மனுதாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டிருந்தது.

ராகுல் காந்தி மீது மற்றுமொரு வழக்கு!

இந்நிலையில், ஜூன் 17-ஆம் தேதி சிஐடி முன் நேரில் ஆஜராகி எடியூரப்பா வாக்குமூலம் அளித்திருந்தார். இந்த வழக்கில் எடியூரப்பா தவிர, அவரது உதவியாளா்கள் ஒய்.எம்.அருண், எம்.ருத்ரேஷ், ஜி.மாரிசாமி ஆகியோரின் பெயா்களும் சோ்க்கப்பட்டுள்ளன.

இதனிடையே, தன் மீதான போக்ஸோ வழக்கை ரத்துசெய்யக் கோரி எடியூரப்பா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று விதித்திருந்த இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

Read More

Previous Post

ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தும் மனு; பரிசீலிக்க ஐவர் கொண்ட நீதியரசர்கள்

Next Post

நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணி… ரூ. 125 கோடியை பரிசை வழங்கியது பிசிசிஐ….

Next Post
நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணி… ரூ. 125 கோடியை பரிசை வழங்கியது பிசிசிஐ….

நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்திய கிரிக்கெட் அணி... ரூ. 125 கோடியை பரிசை வழங்கியது பிசிசிஐ....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin