டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்து இருந்த விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோருக்கு ஐசிசி அதிர்ச்சி அளிக்கும் வகையிலான பட்டியலை வெளியிட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 76 ரன்கள் குவித்து, ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். மேலும், தொடர் நாயகனாக ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டியில் மேட்ச் வின்னரான விராட் கோலிக்கு ஐசிசி கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதேபோல், ரிஷப் பந்திற்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. அண்மையில் ஐசிசி தனது உலகக் கோப்பை அணியை அறிவித்துள்ளது.
டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட 12 பேர் கொண்ட அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால், இதில் கோலி, ரிஷப் பந்த் இடம்பெறவில்லை. ஐசிசி அணியில் இந்தியாவைச் சேர்ந்த 6 வீரர்களுக்கு அந்த அணி இடம் கொடுத்துள்ளது.
இதையும் படிக்க:
டி-20 உலகக்கோப்பையுடன் டெல்லி வந்த இந்திய அணி… ரசிகர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!
ஐசிசி அணியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை தொடரில் 257 ரன்கள் சேர்த்து, 156.7 ஸ்டிரைக் ரேட் உடன் இருக்கிறார். தொடர் நாயகன் வென்ற ஜஸ்பிரித் பும்ரா 15 விக்கெட் சாய்த்து, எதிரணிகள் ஸ்கோரை கட்டுப்படுத்த உதவினார்.
அதேபோல், நல்லதொரு பேட்டிங் மற்றும் இறுதி ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்த கேட்ச் பிடித்ததற்காக சூர்யகுமார் யாதவ், இறுதி ஆட்டத்தில் த்ரில் ஆன கடைசி ஓவரை வீசி அணிக்கு வெற்றித் தேடி தந்ததற்காக ஹர்திக் பாண்டியா, தகுந்த நேரத்தில் ஸ்கோர் செய்ததற்காக அக்ஷர் படேல், அருமையாக விக்கெட்டுகள் சாய்த்த அர்ஷ்தீப் சிங் இந்த பெருமையைப் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷித் கான் ஃபசல்லா ஃபரூக்கி ஆகியோரும் ஆப்கானிஸ்தான் அணியில் இருந்து தேர்வாகியுள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டோனிஸ் மற்றும் மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த பூரன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இதையும் படிக்க:
ரோகித், விராட் மீண்டும் இந்திய அணியில்… பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா சொன்னது என்ன?
மேலும், 12வது வீரராக தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்கியா இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளில் இருந்து ஒருவர் கூட விளையாடும் 11 பேர் வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.
ஐசிசி அணி: ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ரஷீத்கான், ஃபசல்லா ஃபரூக்கி, மார்கஸ் ஸ்டோனிஸ், நிகோலஸ் பூரன், என்ரிக் நோர்கியா
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)