• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“கண்ணீர் விட்டு அழுதது ஏன்?” – ரொனால்டோ உருக்கமான விளக்கம் | Why I burst into tears Ronaldo explains

GenevaTimes by GenevaTimes
July 3, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
“கண்ணீர் விட்டு அழுதது ஏன்?” – ரொனால்டோ உருக்கமான விளக்கம் | Why I burst into tears Ronaldo explains
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்லோவேனியாவுக்கு எதிரான ‘ரவுண்ட் ஆஃப் 16’ நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் விடாப்பிடியாக ஆடிய அந்த அணியை போர்ச்சுகல் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-0 என்று வீழ்த்தியது.

இருந்தாலும், இந்தப் போட்டியில் ஸ்லோவேனியா கோலை போர்ச்சுகல் கோல் கீப்பர் தடுத்திருக்காவிட்டால், கிடைத்த பெனால்டி வாய்ப்பைக் கோட்டை விட்ட ரொனால்டோ போர்ச்சுகல் வெளியேற்றத்துக்கு காரணம் என்ற பெரும் சுமையை காலம் முழுவதும் சுமக்க வேண்டி வந்திருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் ரொனால்டோவின் பெனால்டி கிக்கை ஸ்லோவேனியா கோல்கீப்பர் தனக்கு இடது புறம் பாய்ந்து தட்டி விட்டார். ரொனால்டோவுக்கு அழுகை பொங்கி வந்தது. கண்ணீர் விட்டு அழுதார், இவர் அழுததைப் பார்த்த போர்ச்சுகல் வீரர்கள் அவரைத் தேற்றினர். ஆனால், கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டில் பதற்றத்துடன் இருந்தாலும் தன் அனுபவ திறமையால் கோல் அடித்து ஈடு செய்தார் ரொனால்டோ. இந்நிலையில் தான் அழுததற்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார் ரொனால்டோ.

“மிகவும் பலமான மனிதர்களுக்குக் கூட மோசாமான நாட்கள் அமையும். அதுவும் அணி என்னுடைய பங்களிப்பின் தேவையை நம்பியிருக்கும் போது, நான் பின்னடைவைக் கொடுத்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உணர்வு ரீதியாக மிகவும் தாழ்ந்து விட்டேன். முதலில் துயரப்பட்டேன், அழுதேன். ஆனால், பிற்பாடு மகிழ்ச்சியடைந்தேன். இதுதான் கால்பந்து, விவரிக்க முடியாத தருணங்கள் நிரம்பிய ஆட்டம்.

இந்த ஆண்டு ஒரே ஒரு தவறு செய்தேன். அதுவும் அணிக்கு கோல் தேவைப்படும் நேரத்தில். ஸ்லோவேனிய கோல்கீப்பர் ஆப்லாக் தடுத்து விட்டார். அப்போது நான் வாய்ப்பைக் கோட்டை விட்டேன். ஆனால், அணி வென்றுள்ளது.

பெனால்டி ஷூட் அவுட்டில் நான் இருமுறை இந்த ஆண்டில் சொதப்பியிருப்பதும் நினைவுக்கு வந்தது. ஆனால் மூன்றாம் முறை கச்சிதமாக அடித்தேன். சில வேளைகளில் கால்பந்தாட்டம் நியாயத்தை அளிக்கும். நாங்கள் காலிறுதிக்குள் நுழைய தகுதியான அணியே. நான் பிரச்சினைகளை சந்திக்கத் தயங்க மாட்டேன்.

சில வேளைகளில் நான் நல்ல முறையில் ஆடுவேன். சில சமயங்களில் அப்படி ஆட முடியாமல் போகும். ஆனால், முயற்சி செய்யாமல் கைவிடுவது என்பது மட்டும் என்னிடம் நடக்காது” இவ்வாறு ரொனால்டோ கூறினார்.



Read More

Previous Post

Kallakurichi Hooch Tragedy : கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம்.. நீதிபதி பி.கோகுல்தாஸ் ஆணையத்தின் 4 முக்கிய பணிகள்!

Next Post

ஹத்ராஸ் துயரச் சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 116ஆக அதிகரிப்பு; பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் | Makkal Osai

Next Post
ஹத்ராஸ் துயரச் சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 116ஆக அதிகரிப்பு; பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் | Makkal Osai

ஹத்ராஸ் துயரச் சம்பவத்தில் மாண்டோர் எண்ணிக்கை 116ஆக அதிகரிப்பு; பெரும்பாலானோர் பெண்கள், சிறுவர்கள் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin