16
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (IOC) நேற்று முதல் (02) நிறுவனத்தின் பல எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் Octane 100 பெற்றோலை விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 100 பெற்றோலை விற்பனை செய்யும் உலகில் எட்டாவது நாடாக இலங்கை மாறுமெனவும் இந்த பெற்றோல் ஒரு லீற்றர் 793 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமெனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒக்டேன் 100 பெற்றோல் நவீன வாகனங்களுக்கு மிகவும் பொருத்தமானது. இந்த எரிபொருளைப் பயன்படுத்துவது சீரான ஓட்டத்தையும் கூடிய கிலோமீட்டரை கடக்கவும் உதவுமென (அதிக மைலேஜையும்) தெரிவிக்கப்பட்டுள்ளது.
