மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள மாட்டுத்தாவணி காய்கறி அங்காடியில் 150க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லறை கடைகள் உள்ளன. இங்கு உள்ள கடைகளில் இருந்து தான் மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு தினந்தோறும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்கள் ஆகவே தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவிளைச்சல் குறைந்து மார்க்கெட்டுகளில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை அதிரடியாக உயர்ந்தது.
அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்காளி 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 100 லிருந்து 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மீண்டும் முதல் தர தக்காளியின் விலை 50 ரூபாய்க்கும், இரண்டாவது தர தக்காளி 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் முதல் தரம் 80 ரூபாய்க்கும், இரண்டாவது தரம் 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
பொதுவாக மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி, ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்பொழுது அப்பகுதியில் மழையின் அளவு குறைந்து இருப்பதால் தக்காளியின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. எனவே தக்காளியின் விலை மீண்டும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேபோல் மதுரையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான உடுமலைப்பேட்டை, தேனி, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வரக்கூடிய சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகமாக இருப்பதினால் சின்ன வெங்காயத்தின் விலையம் குறைந்துள்ளதாகவும், மைசூர் வெங்காயத்தின் விலை மட்டும் ரூ. 100 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இனிவரும் நாட்களில் பருவ மழையை பொறுத்து தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை ஏறுவதும், இறங்குவதும் இருக்கும் என்றும் ஆடி மாதத்தில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)