• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

நடுவானில் குலுங்கிய விமானம்: ஏர் யூரோப்பாவில் பயணித்த 40 பயணிகள் காயம் | severe turbulence on mid air 40 passengers injured Air Europa

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in உலகம்
Reading Time: 5 mins read
0
நடுவானில் குலுங்கிய விமானம்: ஏர் யூரோப்பாவில் பயணித்த 40 பயணிகள் காயம் | severe turbulence on mid air 40 passengers injured Air Europa
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரேசிலியா: ஐரோப்பியா நாடான ஸ்பெயினிலிருந்து தென் அமெரிக்க நாடான உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா விமானம் நடுவானில் குலுங்கிய காரணத்தால் 40 பயணிகள் காயமடைந்தனர். இதனால், அவசர நிலையை கருத்தில் கொண்டு அந்த விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.

திங்கட்கிழமை அன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் உள்ளவர் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. விமானம் வானில் குலுங்கிய போது அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்தில் வேண்டிய மருத்துவ உதவி வழங்கப்பட்டது. மேலும், 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது என்பதை ஏர் யூரோப்பா தெரிவித்துள்ளது.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானத்தில் 325 பேர் பயணித்துள்ளனர். இந்த விமானம் போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மாற்று விமானம் மூலம் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஏர் யூரோப்பா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பயணிகள் சிலர் பகிர்ந்துள்ளனர். அதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கி இருந்தார்.

இதே போல கடந்த மே மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றும் நடுவானில் குலுங்கியது. அதில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார். பயணிகள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

சுப முகூர்த்த தினம் எதிரொலி… விறுவிறுவென விலையேறிய பூக்கள்… மல்லிகை விலை தெரியுமா..?

Next Post

அரசு உதவி பெற்ற 363 தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு | Makkal Osai

Next Post
அரசு உதவி பெற்ற 363 தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு | Makkal Osai

அரசு உதவி பெற்ற 363 தமிழ்ப்பள்ளிகளின் தர உயர்வுக்கு 25.41 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin