கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர்ச்சந்தை தென் தமிழகத்தின் மிகப்பெரிய மலர் சந்தையாகும். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பூக்கள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பூக்கள் தோவாளை மலர் சந்தை கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இங்கிருந்து திருவனந்தபுரம் உள்பட கேரள மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்காகப் பூக்கள் வாங்கிச் செல்லப்படுகின்றன.
தோவாளை மலர்ச் சந்தையில் நேற்று மல்லிகை கிலோ ரூ.200க்கும், பிச்சி ரூ.250க்கும், சம்பங்கி ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு இன்று பூக்கள் விலை உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: தனுஷ் படம் சூட்டிங் நடந்த இடமா..? ஆசையாக செல்ஃபி எடுத்துச் செல்லும் பயணிகள்…
அதன்படி, பிச்சிப்பூ கிலோ ரூ.400க்கும், மல்லிகைப் பூ கிலோ ரூ.400க்கும், அரளிப்பூ கிலோ ரூ.70க்கும், வாடாமல்லி கிலோ ரூ.50க்கும், கேந்தி பூக்கள் கிலோ ரூ.60க்கும், சம்பங்கி கிலோ ரூ.100க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300க்கும், ரோஸ் கிலோ ரூ.100க்கும் விற்பனையாகிறது.
மேலும், ஸ்டெம்ப்ரோஸ் ஒரு கட்டு ரூ.400க்கும், துளசி கிலோ ரூ.40க்கும், தாமரைப் பூ ஒன்று ரூ.5க்கும், மரிக்கொழுந்து கிலோ ரூ.140க்கும், செவ்வந்தி கிலோ ரூ.250க்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து வியாபாரி கூறுகையில், “நேற்றைய தினத்தை ஒப்பிடுகையில் இன்றைய தினம் பூக்களின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் வியாபாரம் மந்தமாக உள்ளது.
இதையும் படிங்க: திருநெல்வேலியில் திரண்ட எழுத்தாளர்கள்… இலக்கிய ஆளுமைகளின் கலந்துரையாடல்…
இருப்பினும் இன்று செவ்வாய்க்கிழமை என்பதாலும் நாளைய தினம் சுபமுகூர்த்தத் தினம் என்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. அதனால் தான் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பூ வியாபாரம் சற்று சூடு பிடித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியாக உள்ளனர் ” எனத் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
