இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், தமிழ்நாடு முத்திரை (மதிப்பீடு, வெளியீடு மற்றும் திருத்தம் செய்வதற்கான மதிப்பீட்டுக் குழு அமைத்தல்) விதிகள், 2010, விதி 4ன்படி ஒவ்வொரு வருடமும் வழிகாட்டி மதிப்பு சீரமைக்கப்பட வேண்டும். வழிகாட்டி மதிப்பினை சீரமைக்கவும், வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களையவும், புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலுக்கான நெறிமுறைகளை பதிவுத்துறைத்தலைவர் தலைமையிலான மதிப்பீட்டு குழு கடந்த 26.04.2024 அன்று கூடி வகுத்தளித்தது. இதனை பின்பற்றி மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான துணைக்குழுக்களால் மதிப்பு நிர்ணயம் செய்யும் நடவடிக்கை துவங்கப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)