சைவ சமயம் சிவநெறி எனவும் அழைக்கப்படுகின்றது. முழு முதற் கடவுளாக விளங்கும் சைவ சமயிகளின் சிவம் என்ற சொல் பல நூற்றாண்டுகளாக மாறி சைவம் என்று மாறியதாக கூறப்படுகின்றது. இன்றைய இந்து மதத்தின் பிரிவாக தான் சிவநெறி என அழைக்கப்படும் சைவ சமயத்தின் பிரிவாக அமைந்துள்ளது. இமய மலைச் சாரலில் வாழ்ந்த பழங்குடியினர் ஆக கருதப்படும் மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று கூறலாம். வட இந்தியாவில் காணப்படும் இமய மலையானது காலத்தால் பிந்தியது எனவே மலை தெய்வ வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்துள்ளது. சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை அணிதல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், எலும்புகளை அணிதல் போன்ற பல்வேறு விடயங்களால் ‘சிவனே பெரும் கடவுள் அவனின்றி வேறொன்றும் இல்லை’ எனலாம். சிவனுக்கு நாகங்கள் இருப்பதால் அவர் இன்னும் ஒரு பெயரால் அழைக்கப்படுகிறார். அது நாகரின் தெய்வம் ஆகும்.
அத்தோடு குறிப்பிடுவோமானால் இவர், பழமை தெய்வமாவார். அதனால் இவர் பழமையின் வடிவமாகவும் கருதப்படுகின்றார். அடுத்ததாக சிந்துவெளி நாகரீகத்தின் சிவ வழிபாட்டின் மகிமையை பற்றி பார்ப்போமாக இருந்தால் முதலில் சிந்துவெளி நாகரீகம் 2500 முதல் 2000 வரை நிலவியதாக கருதப்படுகிறது.
அந்த காலத்திலும் கூட சிவ வழிபாடு என்பது நிலவியுள்ளது என எம்மால் குறிப்பிட முடியும். மொகெஞ்சதாரோ , ஹரப்பா போன்ற சிந்துவெளி நகர் பகுதிகளில் சிவலிங்கத்தினை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இரு கொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை ஈசனின் பசுபதி தோற்றத்தினை குறிக்கிறது. இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக சிவ வழிபாட்டுக்கும் அத்தோடு தொல்பொருள் மூலாதாரமாக காணப்படுகிறது. அடுத்ததாக இக் கட்டுரையில் பிரதானமாக பார்க்க வேண்டியதுதான் ஈழத்தில் சிவமயத்தின் மகிமை என்பதாகும். அதன் முதல் கட்டமாக ஈழம் எனப்படுவது இலங்கை. இதுவே ஈழம் ஆனது. இது மிகவும் ரம்மியமான மற்றும் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டது. அதாவது கடலின்றி ஈழம் இல்லை என்று தான் கூற வேண்டும். உதாரணமாக நாம் சிவனின் பாடலை கூறுவோமாக இருந்தால் அதாவது ‘ஈழவள நாடு எங்கள் சிவ பூமி லிங்கேஸ்வரர் ஆண்ட சிவ பூமி’ என்ற பாடலின் மூலம் நான் கூற முற்படுவது என்னவென்றால் ஈழ நாடு என்பது வளம் மிக்க நாடு எனவும் லிங்கேஸ்வரர் என குறிப்பிடுவது இலங்கையை ஆண்ட தமிழ் மன்னனான ராவணனை தான் இவ்வாறு இப்பாடலில் குறிப்பிடுகின்றனர். ராவணன் என்பவன் ஈழ வள நாட்டை ஆட்சி செய்த தமிழ் மன்னன் ஆவான். இவன் ஒரு அரக்க குலத்தினை சேர்ந்தவன். இவன் ஒரு மாபெரும் சிவ பக்தன் இவன் செய்த கடும் சிவ வழிபாட்டால் ராவணனுக்கு பல சிவனின் சக்திகள் கிடைக்கப்பெற்றன.
இது மட்டுமின்றி பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் ஈழத்தில் சோழர் ஆட்சியானது நிலவியது. ஈழ வள நாட்டில் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய நகரங்களை ஆட்சி செய்தனர். வானவன் மாதேவி ஈஸ்வரம் என்பது இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்றாகிய பொலனறுவையில் சோழர்களால் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஆகும். 1070 ஆம் ஆண்டு வரை இந்த நகரைத் தலைநகரமாக கொண்டு ஆட்சி நடத்திய சோழர்கள் அமைத்த கோயில்களுள் முழுமையாக எஞ்சியுள்ளது இதுவேயாகும்.
இந்த சோழர்கள் அமைத்த சிவன் கோயிலில் சிவராத்திரி தினத்தன்று சிவராத்திரி விழாவும் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சோழ பரம்பரையை சேர்ந்த மன்னர்களும் பெரும் சிவ பக்தர்கள் என எம்மால் கூற முடியும். இந்த பொலன்னறுவை சிவன் கோயில் ஆனது சோழர் காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியை சேர்ந்ததாக காணப்படுகிறது. இந்த பொலன்னறுவை சிவன் கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டது.
இது ஏனைய கோயில்களை போல் அல்லாது அளவில் சிறியதாகக் காணப்படுகின்றது. கருவறையையும் அது முன்னாள் ஒரு மண்டபத்தையும் கொண்ட இக்கோயிலின் கருவறையின் வெளிப்புறம் 20 அடி 6 அங்குல அளவு கொண்ட சதுர வடிவமானது. உட்புறம் 9 அடி 4 அங்குல சதுரம் ஆகும்.
இதிலிருந்து அதன் கருவறைச் சுவர் 5 அடி 6 அங்குல தடிப்புக் கொண்டது என அறிய முடிகிறது.இதன் முன் மண்டபம் 16 அடி நீளமும் 9 அடி 4 அங்குலமும் அகலமும் கொண்டது. எனவே இது சோழர்களின் சிறந்த கட்டுமானப்பணிகளில் ஒன்றாக பொலனறுவையில் இன்னும் காணப்படுகிறது.
தாயுமானவர் ஆன திருமூலர் கூட திருமந்திரத்தில் ஈழம் ஒரு சிவபூமி எனக் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது சிவலிங்கம் என்றால் என்ன? சிவலிங்கம் எனப்படுவது முழு முதற் கடவுள் சிவனை குறிக்கும் ஒரு வடிவமாகும்.
சிவனை இந்துக்கள் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளிலும்வழிபடுகின்றனர்.
இவற்றுள் சிவலிங்கம் அருவுருவ நிலையே ஆகும். இந்த வகையில் லிங்க வழிப்பாட்டில் மிகவும் பழமையானது. சிந்துவெளி நாகரீகத்தின் காலப்பகுதியினை குறிப்பிட முடியும். எனவே இவற்றுள் லிங்கம் பல வகைப்படும். அவையாவன. முகலிங்கம், சகஸ்ரலிங்கம், தாரா லிங்கம் சுயம்பு லிங்கம் என்பனவாகும் இறுதியாக குறிப்பிட்ட சுயம்பு லிங்கமானது இருளில் தான் வீற்றிருக்கும் இது தானாக தோன்றியது.
எழுத்தாக்கம்:- லி.சிவகஜன்

