இந்திய தென் ஆப்ரிக்கா இடையேயான இறுதிப் போட்டியின் கடைசி 5 ஓவர்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே அழைத்துச் சென்றது.
இந்தியா – தென் ஆப்பிரிக்காவிற்கிடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் மைதானத்தில் நடைபெற்றது. ஆரம்பம் முதலே பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இறுதி 5 ஓவர்கள் தான் ரசிகர்களின் ரத்தக்கொதிப்பை எகிற செய்துவிட்டது.
கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்கா வசம் 6 விக்கெட்டுகள் இருந்தன. டேஞ்சர் மேன் கிளாசனும் களத்தில் இருந்தார். 16 ஆவது ஓவரை வீசிய, இந்தியாவின் பீரங்கி பும்ரா 4 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்க, தென் ஆப்ரிக்கா அணியில் பதற்றம் தொற்றிக் கொண்டது.
17 ஆவது ஓவரை வீசிய துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, முதல் பந்திலேயே அதிரடியாக விளையாடிய கிளாசனை வெளியேற்ற, இந்திய ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் பீரிட்டது. அந்த ஓவரிலும் 4 ரன்கள் மட்டுமே தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்தது.
இதையும் படிக்க:
மோடி முதல் தோனி வரை… பிரபலங்களின் வாழ்த்து மழையில் இந்திய அணி..
இந்த நிலையில் 18 ஆவது ஓவரை வீசிய பும்ரா, தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களை திணறடித்தார். யான்சனை வெளியேற்றிய அவர் 2 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.
பும்ராவின் Performance பார்த்து உத்வேகம் அடைந்த அர்ஷ்தீப் சிங்கும் 19 ஆவது ஓவரை அட்டகாசமாக வீச, அந்த ஓவரிலும் 4 ரன்களே தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்தது.
16, 17, 18, 19 ஆவது ஓவர்களில் தென் ஆப்ரிகாவுக்கு ஒரு பவுண்டரிகூட கிடைக்காத நிலையில் 20 ஆவது ஓவரின் முதல் பந்திலேயே கில்லர் மில்லரை அட்டகாசமான சமயோசித கேட்சால் வெளியேற்றினார் SKY.
இதையும் படிக்க:
அதே மைதானம்.. அன்று கேப்டனாக தோல்வி.. இன்று பயிற்சியாளராக வெற்றி… சாதித்துக்காட்டிய ராகுல் டிராவிட்
அடுத்த பந்தில் ரபாடா ஒரு பவுண்டரி விளாச, இந்திய ரசிகர்கள் கொஞ்சம் டென்சனாகினர். எனினும் நேர்த்தியாக பந்து வீசிய பாண்டியா, மேலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதோடு, இந்தியா 17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 கோப்பையை பெற காரணமாக அமைந்தார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
