டி20 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல், இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் ஐடன் மார்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய 11 ஆண்டுகளாக எந்த கோப்பையையும் வெல்லவில்லை. எனவே, இந்த கோப்பையை கைப்பற்றிவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு வருகிறது. அதே நேரத்தில் தென்னாப்பிரிக்க அணி தனது முதல் ஆண்கள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் இருக்கும் ஆடுகளங்களில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி குரூப் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் எதிரணிகளை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது.
இதையும் படிக்க:
இந்தியா – தென் ஆப்பிரிக்கா: 11 கனவு அணி வீரர்கள், பிட்ச் ரிப்போட் இதுதான்
இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஜடேஜாவிற்கு 4 ஓவர்களை கொடுக்கக்கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, தற்போது இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடும் போட்டியில் Flat பிட்ச் இருக்கும் பட்சத்தில், அது வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும்.
இதற்கு முன் நடைபெற்ற போட்டிகளில், ஹர்திக் பாண்டியாவிற்கு 4 ஓவர்கள் கொடுக்கப்பட்டது. இங்கிலாந்துடன் நடைபெற்ற போட்டியில், ஜடேஜாவிற்கு 1 ஓவர் மட்டுமே கொடுக்கப்பட்டது. அதில் ஜடேஜா ஒரே ஓவரில் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இதையும் படிக்க:
உலகக்கோப்பை மகுடம் யாருக்கு? இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன?
இறுதிப்போட்டியிலும் ஜடேஜாவிற்கு 4 ஓவர்கள் தரப்படாது என்பதற்கு முன்னோட்டமாக தான் இதற்கு முன் நடந்த போட்டிகளில் அவருக்கு அனைத்து ஓவர்களையும் கொடுக்கவில்லை என ரோகித் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். மேலும், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவிற்கு 4 ஓவர்களும், ஷிவம் துபேவிற்கு இடையில் 1-2 ஓவர்கள் கொடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)