ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று (29) இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் துரதிர்ஷ்டவசமான அணியாகக் கருதப்பட்ட தென்னாப்பிரிக்க அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை பதிவு செய்து, அரையிறுதியில் புரட்சிகரமான ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா அணியின் வெற்றி
அதனை தொடர்ந்து அரையிறுதியில் கடந்த முறை சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இதேவேளை, 2014ஆம் ஆண்டு எய்டன் மார்க்ரம் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத்தை வென்ற தென்னாபிரிக்கா, அவரது தலைமையில் முதல் முறையாக ரி20 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் நோக்கில் இன்று களம் இறங்கியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

