ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்ற அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் சிஎஸ்கே மூன்று முறை மட்டுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதுமட்டுமின்றி மற்ற அனைத்து தொடர்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் தோனிக்கு தன் வீரர்கள் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம்.அவர்களை நம்பி வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அவ்வளவு சீக்கிரம் யாரையும் வெளியேற்ற மாட்டார். ஃபார்மில் இல்லாத வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்து நல்ல வீரர்களாக மாற்றுவதை தொடர்ந்து செய்து வந்தார். அதுவே சிஎஸ்கே வெற்றிகரமான அணியாக மாறியதற்கான அணி.
இந்நிலையில், இந்த டி20 உலக கோப்பை தொடரிலும் அதே போன்ற திட்டத்தை இந்திய அணியை ரோஹித் சர்மா வழிநடத்தி வருகிறார்.
இந்திய அணியில் இருந்து முகமது சிராஜ் ஒருவர் மட்டும் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

