சிங்கப்பூர் மற்றும் ஜொகூர் பாரு இடையே RTS விரைவு ரயில் சேவையின் கட்டுமான பணியின் போது வெளிநாட்டு ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் மற்றொரு ஊழியருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் ஜூன் 27-ஆம் தேதி நிகழ்ந்தது.
அவர்கள் இரும்பு கம்பிகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது கம்பிகள் ஆட்டங்கண்டு ஊழியர்கள் மீது விழுந்தது.
இதனால் அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
சுமார் 9.30 மணியளவில் அவர்கள் மீது கம்பிகள் விழுந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.

