மலாக்கா:
நேற்று மாலை பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, அலோர் காஜாவின் துரியான் துங்கலில் உள்ள புக்கிட் பாலாய் சமூக நிலையத்தில் நிவாரண மையம் ஒன்று திறக்கப்பட்டது.
அங்கு ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 47 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலகத்தின் லெப்டினன்ட் கர்னல் (PA) காமருல்ஷ்யா கூறினார்.
நேற்று இரவு 11.30 மணிக்கு திறக்கப்பட்ட இந்த மையத்தில் கம்போங் புக்கிட் பாலாய் மற்றும் கம்போங் புக்கிட் தம்புன் ஆகிய பகுதிகளிலுள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கியுள்ளனர் என்றும் அவர் என்று காலை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறினார்.


