ஃபிக்சட் டெபாசிட்டில் உங்கள் பணத்தை டெபாசிட் செய்யலாம் என்று யோசித்து வருகிறீர்களா? எந்த பேங்கில் டெபாசிட் செய்யலாம் என்பதில் உங்களுக்கு குழப்பம் இருந்தால் இந்த பதிவில் அதற்கான பதில் உள்ளது.
பர்சனல் ஃபைனான்ஸ் என்று வரும் பொழுது ஃபிக்சட் டெபாசிட்டுகள் (Fixed Deposits – FD) அதன் பாதுகாப்பான தன்மை மற்றும் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் காரணமாக பலர் விரும்பக்கூடிய முதலீட்டு தேர்வாக தொடர்ந்து இருந்து வருகிறது. டேர்ம் டெபாசிட்டுகள் அல்லது டைம் டெபாசிட்டுகள் என்றும் அழைக்கப்படும் இந்த ஃபிக்சட் டெபாசிட்களில் ஒருவர் பெரிய அளவிலான ஒரு தொகையை வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் செய்து அதற்கான நிர்ணயிக்கப்பட்ட வட்டியை பெறுகிறார்.
பொதுவாக ஃபிக்சட் டெபாசிட்டுகள் வழக்கமான சேமிப்பு அக்கவுண்டுகளுடன் ஒப்பிடும்பொழுது அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. குறைந்தபட்ச ரிஸ்கில் தங்களுடைய சேமிப்புகள் குறிப்பிடத்தக்க அளவு வளர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஃபிக்சட் டெபாசிட் ஏற்றதாக அமைகிறது. எனினும் ஃபிக்சட் டெபாசிட் பொருத்தவரை அதன் டெபாசிட் காலத்தில் செய்யப்படும் வித்ட்ராயில்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதனை மீறினால் நீங்கள் அபராதங்களை செலுத்த நேரிடலாம்.
இந்தியாவில் உள்ள முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு தற்போது வழங்கி வரும் வட்டி விகிதங்கள் என்னவென்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்:
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
400 நாட்களுக்கு 7.10% – அம்ரித் காலாஷ் (Amrit Kalash)
பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB)
400 நாட்களுக்கு 7.25%
கனரா வங்கி
444 நாட்களுக்கு 7.25%
HDFC வங்கி
18 மாதங்கள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவாக – 7.25%
ICICI வங்கி
15 மாதங்கள் முதல் 2 வருடங்கள் வரை – 7.20%
பேங்க் ஆப் பரோடா (BOB)
2 வருடங்களுக்கு மேல் 3 வருடங்கள் வரை – 7.25%
ஆக்சிஸ் வங்கி
17 மாதங்கள் முதல் 18 மாதங்களுக்கும் குறைவாக – 7.20%
Also Read |
UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!
இந்த வட்டி விகிதங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது மற்றும் ஒவ்வொரு வங்கியின் பாலிசிகள் மற்றும் தற்போதைய சந்தை நிலைகளின் அடிப்படையில் மாறலாம் என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். லேட்டஸ்ட் தகவல்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கு நீங்கள் நேரடியாக குறிப்பிட்ட அந்த வங்கியின் வெப்சைட்டை பார்வையிடலாம் அல்லது வங்கியை நேரடியாக அணுகலாம்.
மாறிக்கொண்டே இருக்கக்கூடிய பொருளாதார நிலையில் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்கள் மற்றும் நிலைத்தன்மையை வழங்கக்கூடிய இந்த ஃபிக்சட் டெபாசிட் தொடர்ந்து பலரது பொருளாதார திட்டமிடலில் பயனுள்ளதாக இருந்து வருகிறது. தங்களுடைய டெபாசிட் தொகைக்கான எதிர்பார்க்கப்படும் ரிட்டன் என்ன என்பதை தெரிந்து கொள்ள நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் ஏற்றதாக அமைகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
