• Login
Tuesday, June 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

விராட் கோலிக்கு கேப்டன் ரோகித், பயிற்சியாளர் திராவிட் ஆதரவு | T20 WC | Captain Rohit coach Dravid supports Virat Kohli T20 WC

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
விராட் கோலிக்கு கேப்டன் ரோகித், பயிற்சியாளர் திராவிட் ஆதரவு | T20 WC | Captain Rohit coach Dravid supports Virat Kohli T20 WC
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கயானா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி, மோசமான ஃபார்மினால் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். அவரை ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் அவரை ஆதரித்துள்ளனர். இந்த தொடரில் 1, 4, 0, 24, 37, 0, 9 என மொத்தம் 7 இன்னிங்ஸ் ஆடி 75 ரன்கள் மட்டுமே கோலி எடுத்துள்ளார். இதில் அவர் தொடக்க ஆட்டக்காரராக பேட் செய்து வருகிறார். இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 741 ரன்களை அவர் எடுத்திருந்தார்.

விராட் கோலியின் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் திராவிட், “அனைவரும் கோலியின் ஆட்டம் குறித்து அறிவோம். இப்போது ஹை-ரிஸ்க் பிராண்ட் ஆப் கிரிக்கெட்டை நாங்கள் அணுகி வருகிறோம். சில நேரங்களில் இதில் நாம் எதிர்பார்த்தபடி ரன் குவிக்க முடியாமல் போகலாம். அரையிறுதி ஆட்டத்தில் கூட அவர் அபார சிக்ஸரை விளாசினார். ஆட்டத்தில் டெம்போ செட் செய்தார். துரதிருஷ்டவசமாக பந்து சீம் ஆன காரணத்தால் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் ஆட்டத்தில் வெளிப்படுத்தும் இன்டென்ட் அபாரம். அவரிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வரும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் கேப்டன் ரோகித் சர்மா, “விராட் கோலி தரமான வீரர். அனைவரும் இது மாதிரியான சூழலை கடக்கலாம். பெரிய போட்டிகளில் அவரது முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். அதனை நாங்கள் நன்கு அறிவோம். 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருபவருக்கு ஃபார்ம் ஒரு பிரச்சினை இல்லை. அவரிடம் இன்டென்ட் உள்ளது. இறுதிப் போட்டியில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எண்ணுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நாளை (சனிக்கிழமை) தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளும் இந்த தொடரில் இதுவரை தோல்வியை தழுவவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

மீண்டும் வெளிநாட்டுக்கு பறக்கும் முதல்வர்! விரைவில் அமெரிக்கா செல்கிறார்! பேரவையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!-tn assembly 2024 live cm mk stalin to visit america soon to attract investments minister trb raja announces

Next Post

டீசல் மானியத்தை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்படும்: நிதி அமைச்சகம் | Makkal Osai

Next Post
டீசல் மானியத்தை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்படும்: நிதி அமைச்சகம் | Makkal Osai

டீசல் மானியத்தை திரும்பப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 1 முதல் திறக்கப்படும்: நிதி அமைச்சகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin