ஒரு நாட்டின் ஒட்டுமொத்த வரலாற்றை,அதன் ஆழமான ஆளுமையைப் படம் பிடித்துக்காட்டும் கண்ணாடியாகத் திகழ்வது அந்நாட்டின் கலை, கலாச்சாரப் பண்பாட்டுத் துறையினரும் அதன் மீதான அக்கறை மிக்கவர்களும்தான் என்றால் மிகையன்று.
இன்றைய நிலையில், உலகின் தரமான நிகழ்ச்சிகளில் ஒன்றாக அழகு ராணிப் போட்டிகள் அனைத்துலக அரங்கில் நடைபெற்று சிறப்பான இடத்தைப் பிடித்து வருகின்றன.
உலக பிரபல அழகுப் போட்டி வரிசையில் இடம்பெற்ற சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024 இறுதிச் சுற்று அனைத்துலகப் பார்வையையும் கவனத்தையும் ஈர்த்து மிகப் பிரமாண்டமாக நம் நாட்டில் நடைபெற்றது.


ரோயல் சூலான் முத்தியாரா டாமான்சாரா நட்சத்திர ஹோட்டலில் அமைந்துள்ள முத்தியாரா கிராண்ட் பால் ரூமில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேலும் அழகு சேர்க்கும் வண்ணமாக, மஜ்லிஸ் கெபுடாயான் டான் வாரிசான் நூசாந்தாரா அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு நல்கி கெளரவப்படுத்தப்பட்டது.
மலேசியா மடானி கோட்பாட்டின் கீழ், மேம்பாடு மிக்க சமுதாயத்தை உருவாக்குவதிலும் மற்றும் இத்துறைக்கான நாகரிக தனித்துவத்தை அறிமுகப்படுத்துவதில், சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024 நிகழ்வின் ஏற்பாட்டாளரும் தேசிய இயக்குநருமான அமித்தா கோர் மல்ஹேத்ராவின் அரும்பணி,நாட்டின் இளம் வயதினர்களை ஈர்க்க செய்து இத்துறையில் பங்களிக்க வைத்தது மிகவும் பாராட்டுக்குறியது என்று டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன் புகழாரம் சூட்டினார்.
அழகு போட்டியை திறம்பட வடிவமைத்து வழி நடத்துவது மலேசியாவும் இதற்கு விதிவிலக்கல்ல என்று கூறிய அவர், ஆறாம் ஆண்டாக வெற்றிகரமாக நடைபெற்ற இந்நிகழ்வு சிறந்த பிரபலங்களை உருவாக்க பாதை அமைத்து கொடுக்கக் கூடிய தளமாக உருவாக்கியிருக்கிறது.
இதற்கிடையில், ஊழல் அதிகார முறைகேடுகளை மூடி மறைத்தால் அரசு துறை தலைவர்களுக்கு பதவி உயர்வு இல்லை என்று மலேசியாவின் பத்தாவது பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்திருப்பதை மக்கள் வரவேற்றிருப்பதையும் டத்தோ ஶ்ரீ ஶ்ரீ சுகுந்தன் சுட்டிக்காட்டினார்.


தொடர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் நிலைத்தன்மையான ஆட்சிக்கும் அதோடு நாட்டின் நிபுணத்துவ தொழிற்துறை வளர்ச்சிக்குத் திறன் மிக்க மனித வளத்தை உருவாக்கும் முயற்சியில் துணைப் பிரதமரும் தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் ஸாயிட் ஹமிடி TVET (திவெட்) கல்வில் அதீத அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்.
தாம் தலைமை ஏற்றிருக்கும் தேசிய திவெட் மன்றத்தின் வழி இந்திய இளைஞர்களுக்கு வேண்டியதைச் செய்வேன் என்று உறுதியளித்திருப்பதையும் அவர் வரவேற்றார்.
இந்திய இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன் படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் அறிவுறுத்தினார்.
விமர்சையாக நடைபபெற்ற சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா 2024 இறுதிச் சுற்றின் முதல் வெற்றியாளராக இளம் வழக்கறிஞர் டயாளினி துரைசாமி நீதிபதிகளால் தேர்வு செய்யப்பட்டார். அழகு ராணி கீரிடம் சூட்டப்பட்டது.


ஆண்கள் பிரிவில் முதல் நிலை வெற்றியாளராக யுவன் ஷரனுக்கு முடி சூட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக பெட்டிட் பிரிவு போட்டியாளர்களை அரங்கத்தில் அமர்ந்திருக்கும் வருகையாளர்களின் பார்வையும் கவனத்தையும் ஈர்த்தது.
உளவியல் துறையைச் சார்ந்த துர்காஷினி பத்திகிருஷ்ணனுக்கு சூப்பர் மோடல் யுனிவர்ஸ் மலேசியா போட்டி 2024 வெற்றியாளராக முடி சூடப்பட்டது.
மக்கள் தேர்வு வெற்றியாளர் விருதும் வழங்கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டார்.
அழகுக்கு வண்ணம் சேர்த்த இளம் வெற்றியாளர் துர்காஷினிக்கு வெற்றி கேடயமும், நற்சான்றிதழும் எடுத்து வழங்கியதோடு தமது பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார் ஶ்ரீ சுகுந்தன்.


