தமிழ்த் திரையுலகில் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த திரிஷாவின் வாழ்க்கையில் சூறாவளி போன்று வந்தவர் தான் நயன்தாரா.. ஒருவழியாக நயன்தாரா திருமணம் ஆகி செட்டில் ஆகிவிட்ட நிலையில் திரிஷாவிற்கு ஜாக்பாட் அடித்தது போன்று தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளன. இது நயன்தாராவிற்கு இக்கட்டான சூழல் என்றாலும், தன்னால் முடிந்த அளவிற்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறார் நயன்தாரா.
நயன்தாரா தனக்கு தெரிந்த இயக்குனர்கள், நண்பர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரிடமும் திரிஷாவிற்கு வாய்ப்பு தராதபடி பார்த்து கொள்கிறார். அப்படித்தான் அட்லி தயாரிப்பில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நாயகியாக திரிஷா உறுதி செய்யப்பட்ட நிலையில், சில காரணங்களுக்காக தற்போது அந்த தேர்வானது கிடப்பில் போடப்பட்டது. இதற்குப் பின்னாலும் அம்மணியின் வேலை இருக்கும் என்று சிலர் சந்தேகிக்கின்றனர்.

