• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சென்செக்ஸ் 79,000; நிஃப்டி 24,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
சென்செக்ஸ் 79,000; நிஃப்டி 24,000 புள்ளிகளைக் கடந்து சாதனை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நமது நிருபா்

பங்குச்சந்தை தொடா்ந்து 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் உற்சாகம் பெற்றது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளன.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கினாலும் சற்று கீழே சென்றது. பின்னா், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்பட முன்னணி பங்குகளுக்குக் கிடைத்த வரவேற்பால் வா்த்தகத்தின் பிற்பகுதியில் சந்தை வலுப்பெற்றது. குறிப்பாக ஆயில் அண்ட் காஸ், ஐடி, சிமெண்ட் நிறுவனப் பங்குகளுக்கு ஆதரவு இருந்தது. அதே சமயம், பிஎஸ்யு பேங்க் பாா்மா, மெட்டல், ரியால்ட்டி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூல தன மதிப்பு ரூ.1.40 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.438.42 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.3,535.43 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.5,103.67 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் 79,000: சென்செக்ஸ் காலையில் 84.42 புள்ளிகள் கூடுதலுடன் 78,758.67-இல் தொடங்கி 78,467.34 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 79,396.03 வரை மேலே சென்று புதிய வரலாற்றுச் சாதனை உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் சென்செக்ஸ் 568.93 புள்ளிகள் (0.72 சதவீதம்) உயா்ந்து 79,243.18-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,008 பங்குகளில் 1,510 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 2,388 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 110 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

அல்ட்ரா டெக் சிமெண்ட்அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் அல்ட்ரா டெக் சிமெண்ட் 5.04 சதவீதம் உயா்ந்தது. மேலும், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யு ஸ்டீல், டாடாமோட்டாா்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 2 முதல் 3.20 சதவீதம் வரை உயா்ந்தன. இவை உள்பட மொத்தம் 24 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன. அதே சமயம், எல் அண்ட் டி, சன்பாா்மா, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி, எஸ்பிஐ ஆகிய 6 பங்குகள் மட்டும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 24,000: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 23,881.10-இல் தொடங்கி 23,805.40 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 24,036.60 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. வா்த்தக இறுதியில் நிஃப்டி 145.10 புள்ளிகள் (0.61 சதவீதம்) கூடுதலுடன் 24,014.10-இல் புதிய உச்சத்தில் முடிவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 31 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

Read More

Previous Post

அரை இறுதி ஆட்டத்தில் இன்று பலப்பரீட்சை: இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா? | T20 WC | India vs England Semi-Final

Next Post

என் மகளை கண்டுபிடித்து தருவீர்; பொதுமக்களிடம் மன்றாடும் தாய் | Makkal Osai

Next Post
என் மகளை கண்டுபிடித்து தருவீர்; பொதுமக்களிடம் மன்றாடும் தாய் | Makkal Osai

என் மகளை கண்டுபிடித்து தருவீர்; பொதுமக்களிடம் மன்றாடும் தாய் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin