புதுதில்லி: தில்லியில் கனமழை பெய்துவரும் நிலையில், விமான நிலையத்தின் டெர்மினல்-1 மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்கூரை ஷீட் தவிர, சப்போர்ட் பீம்களும் இடிந்து விழுந்து, முனையத்தின் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும் சேதமடைந்தது.
தில்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1 இன் மேற்கூரையின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை காலை 5:30 மணியளவில் பெய்த கனமழைக்கு மத்தியில் முனையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மூன்று தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு நடவடிக்கையில் இடுபட்டனர்.

