• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஆப்கனை எளிதில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா | T20 WC | south africa through to icc t20 world cup final beats afghanistan

GenevaTimes by GenevaTimes
June 28, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஆப்கனை எளிதில் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா | T20 WC | south africa through to icc t20 world cup final beats afghanistan
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரினிடாட்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மேற்கு இந்தியத் தீவுகளின் டிரினிடாட்டில் இந்திய நேரப்படி இன்று (வியாழக்கிழமை) காலை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்தது. அஸ்மதுல்லா 10 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் குர்பாஸ், நபி மற்றும் நூர் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

தென் ஆப்பிரிக்க அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் ஷம்சி தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரபாடா மற்றும் நோர்க்யா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். அந்த அணி 13 ரன்களை எக்ஸ்ட்ராவாக கொடுத்திருந்தது. ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைத்தது. அதற்குக் காரணம் அதில் இருந்த புற்கள் என வர்ணனையாளர்கள் சொல்லி இருந்தனர்.

டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஆப்கானிஸ்தானின் 56 ஆல் அவுட் குறைந்தபட்ச ரன்களாக அறியப்படுகிறது. அதே போல ஆப்கானிஸ்தான் அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் எடுத்த குறைந்தபட்ச ரன்னாகவும் இது உள்ளது. மேலும், ஐசிசியின் முழு நேர உறுப்பினர்களாக உள்ள அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் எடுத்துள்ள குறைந்தபட்ச ரன்களில் இது இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 2021 எடிஷனில் துபாயில் நடைபெற்ற போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 55 ரன்கள் எடுத்திருந்தது இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

57 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க விரட்டியது. டிகாக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணைந்து ஆட்டத்தை தொடங்கினர். இதில் ஃபரூக்கி வீசிய 2-வது ஓவரில் 5 ரன்களில் போல்ட் ஆனார் டிகாக். அதன் பின்னர் கவனமாக ஆடிய கேப்டன் மார்க்ரம் மற்றும் ஹென்றிக்ஸ் இணையர், அணியை வெற்றி பெற செய்தனர்.

8.5 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. மார்க்ரம் 23, ஹென்றிக்ஸ் 29 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றில் பொன்னான நாளாக அமைந்துள்ளது. நடப்பு தொடரில் இதுவரை விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா.



Read More

Previous Post

பயணிகளின் தூங்கும் நேரம் குறைப்பு… ரயில்வே நடவடிக்கை

Next Post

பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது | Stock Market Highlight: Markets end record high

Next Post
பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது | Stock Market Highlight: Markets end record high

பங்குச் சந்தையில் புதிய உச்சம்: சென்செக்ஸ் 79,000 தாண்டியது; நிஃப்டி 24 ஆயிரம் கடந்தது | Stock Market Highlight: Markets end record high

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin