• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது’

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையில் இருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கொழும்பில் புதன்கிழமை (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.


அமைச்சர் மேலும் கூறியதாவது:


தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.

ஆனால் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்பதை முதலில் கூற வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக தேவையானது ஜனாதிபதி தேர்தல். நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் போது, அது நேரடியாக மக்களை பாதிக்கிறது. எனவே இந்த நாட்டுக்கு நிலையான அரசாங்கம் தேவை.


ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றால் பொதுத் தேர்தலை நடத்தலாம். அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்பட்டு தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் உள்ளது.


இரண்டு வருடங்களுக்கு முன் 2022 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நாட்டில் இருந்த நிலைமையை நாம் அனைவரும் புரிந்து கொண்டோம். மக்கள் வீதிகளில் எரிபொருள் வரிசை மற்றும் எரிவாயு  வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஒரு காலத்தில் மருத்துவமனைகளில் அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் போனது. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையால் எங்களுக்கு ஏற்பட்ட வெளிநாட்டு நிதி பிரச்சினைகளால் நாங்கள் எதிர்கொண்ட சூழ்நிலையை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


அப்போது ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மட்டுமே சவாலை ஏற்றுக்கொண்டார். ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் சிறு குழுவாக நாங்கள் உதவி செய்தோம். அனுபவத்துடனும், முதிர்ச்சியுடனும், சவால்களை ஏற்கும் திறமையுடனும் அந்த வேலையைச் செய்வார் என்று நாங்கள் நம்பினோம்.

இரண்டு வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கும் போது, நாம் எதிர்பார்த்ததைச் செய்திருக்கிறார். இப்போது ரணில்தான் ஆள் என்ற கருத்து கிராம மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியானால், அன்று நாங்கள் எடுத்த முடிவு சரியானது என்று நினைக்கிறோம்.


நாட்டுக்கு நல்ல செய்தியைக் கூறும்போது, இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நம்பிக்கையுள்ள மனிதனும் நல்லதைக் காண்கிறான். அதை நாங்கள் எதிர் பார்த்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டத்தினர் நல்ல செய்தி சொன்னால் அதை பாசாங்குத்தனத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த போஸ்ட்டர் மூலம், நாட்டை நேசிக்கும் மக்களுக்கும், இந்த நாட்டை அழிக்க நினைக்கும் மக்களுக்கும் இடையிலான பிரிவினையை நாம் தெளிவாகக் காண்கிறோம்.


சில எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் விடுதலை முன்னணியைப் போல   ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் தலைவர்கள்  தொழிற்சங்கங்களின் தலைவர்கள், நாடு நன்றாக இருக்கும் நேரங்களில் எப்போதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


2023 மார்ச்சில் IMF ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முதல் தவணையை பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இது போன்ற வேலைநிறுத்த அலைகளை ஏற்படுத்தியது. ஈஸ்டர் தாக்குதலுக்கு பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கிய நேரத்தில், கோவிட் தொற்றுநோய் காரணமாக நாட்டை மூட வேண்டியிருந்தது. நாட்டை திறந்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதும் தொழிற்சங்கத்தினர் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை வரவிடாமல் தடுத்தனர். இன்று ஒரு நல்ல செய்தி வரவிருக்கும் நேரமும் இவ்வாறு செய்கின்றனர்.


அதை அழித்து வேறாக மாற்ற வேண்டும் என்று இன்று வேலை நிறுத்த அலை நடத்தப்படுகிறது. கடந்த காலத்தில் இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியுடன் அரச ஊழியர்கள் சில சிரமங்களுக்குள்ளாகியிருந்ததாக நான் நம்புகிறேன். ஆனால் கோவிட் தொற்றுநோய்களின் போது நம் நாட்டின் தனியார் துறை கூட சரிந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊழியர்களின் சம்பளம்  கூட குறைக்கப்பட்டது. ஆனால் அரசு அதைச் செய்யவில்லை. அரசு அரச ஊழியர்களை முடிந்தவரை பாதுகாத்தது என்றார்.  



Read More

Previous Post

பூனைக்குட்டியை தீ வைத்து எரித்த 13 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவு | Makkal Osai

Next Post

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்- 5.65 லட்சம் காவலா்கள், 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

Next Post
ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்- 5.65 லட்சம் காவலா்கள், 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்- 5.65 லட்சம் காவலா்கள், 40 லட்சம் தன்னாா்வலா்களுக்கு பயிற்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin