பொதுவாக காதல் என்றாலே பெற்றோர்கள் எதிரியாக மாறிவிடுகிறார்கள். ஆனால் ஒரு தாய் தன் மகளின் காதலை ஆதரித்து, அதற்கு உதவி செய்தார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமான விஷயமே. மகளின் காதலுக்கு அவளுடைய அப்பா சம்மதிக்கவில்லை என்பதால் கணவனையே கொன்றிருக்கிறார் பெண்ணின் தாய்.
தங்கள் காதல் விவகாரத்தை வீட்டில் கூறினால் பெற்றோர் சம்மதிப்பார்களோ இல்லையோ என்று பயத்தினாலேயே பல காதலர்கள் பிரிந்து போக வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதையும் மீறி சிலர் வீட்டில் தைரியமாக தங்கள் காதலைக் கூறி, பெற்றோர்களை சமாதானப்படுத்தி சந்தோஷமாக திருமணமும் செய்து கொள்கிறார்கள்.
இல்லாவிட்டால் பெற்றோர்கள் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்கிறார்கள். குடும்ப கவுரவத்திற்காகவும், சாதிப் பெருமைக்காகவும் காதலித்தார்கள் என்ற காரணத்திற்காக தாங்கள் பெற்ற குழந்தைகளையே ஈவிறக்கமின்றி கொல்லும் பெற்றோர்கள் நம் நாட்டில் நிறையவே இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: Jack Fruit : ஆண்களுக்கு அதிகம் உதவும் பலாப்பழம்… ஆனால், இந்த பிரச்னை இருந்தால் சாப்பிட கூடாது
ஆனால், இந்த சம்பவத்தின் கதையே வேறு. தாய் தன் மகளின் காதலை ஒப்புக்கொண்டு அதற்கு ஆதரவும் தெரிவிக்கிறார். அதேசமயம், தன் மகளின் காதலுக்கு எதிரியாக இருப்பது தன்னுடைய கணவர் தான் என்பதை தெரிந்துகொண்டு அவரையும் கொன்றிருக்கிறார். விசாரணையின் போது இந்த விஷயத்தை தெரிந்துகொண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்து போயினர். தெலுங்கானா மாநிலத்தின் மஹ்பூப் நகர் மாவட்டத்தின் ஜட்சாரலில் உள்ள ராஜீவ் நகர் காலனியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
ராஜீவ் நகர் காலனியை சேர்ந்த மொக்கம் அஜநேயுலு மற்றும் பாக்யலட்சுமி தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒரு இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலிக்க தொடங்கினர். இதையறிந்த பாக்யலட்சுமியும் அவர்களின் காதலுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் தந்தைக்கோ இவர்களது காதல் சுத்தமாக பிடிக்கவில்லை. இவர்களது திருமணத்திற்கு ஆஞ்சநேயாவின் தந்தை சம்மதிக்காததோடு, தன் பேச்சைக் கேட்காமல் தொடர்ந்து காதலித்து வந்ததால் மகளை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த காதல் விவகாரம் தொடர்பாக மனைவி பாக்யலட்சுமியையும் தாக்கியுள்ளார்.
மகளின் காதலுக்குத் இடையூறாக இருப்பதினால் தனது கணவனைக் கொன்றுவிட வேண்டும் என்ற யோசனை பாக்கியலட்சுமிக்கு வந்தது. இதனையடுத்து அதே கிராமத்தில் வசிக்கும் மைசம்மாவிடம் இந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கோவில் முதல் கோடீஸ்வரர் வீடு வரை… சேஃப்டி லாக்கர் தயாரிப்பில் டாப்பரான திண்டுக்கல்…
தனது கணவனைக் கொல்ல 3 ஆடுகளை சுபாரியாகக் கொடுத்த அவர், திட்டமிட்டபடி ஆட்டு கொட்டகையில் ஆஞ்சநேயுலுவை உறங்க வைத்துள்ளார். பின்னர் அங்கு வந்த மைசம்மா, ஆஞ்சநேயுலுவின் கண்களில் மிளகு பொடியை தூவி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் எந்த சத்தம் இல்லாமல் அங்கிருந்து நழுவியுள்ளனர்.
இந்த கொலையில் மேலும் இருவர் உதவி செய்ததாக போலீசார் கூறுகின்றனர். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினர். போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு பிறகே பல உண்மைகள் வெளியே வர ஆரம்பித்தன. தற்போது இந்த வழக்கில் பாக்யலட்சுமியுடன் சேர்த்து நான்கு குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
