இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யும் போது உங்களுடைய ITR சமர்ப்பிப்பை நீங்கள் தான் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இ-வெரிஃபிகேஷன் என்பது கட்டாயமான ஒரு எலக்ட்ரானிக் செயல்முறையாக அமைகிறது.
இது கிட்டத்தட்ட ஒரு டிஜிட்டல் சிக்னேச்சர் போல செயல்படுகிறது. மேலும் நீங்கள் தாக்கல் செய்துள்ள அனைத்து தகவல்களையும் நீங்கள் தான் வழங்கி உள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அதாவது நீங்கள் இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்த 30 நாட்களுக்கு உள்ளாக அதனை இ-வெஃரிபை செய்யாவிட்டால் நீங்கள் தாக்கல் செய்த ITR செல்லுபடி ஆகாது. அதாவது வருமானவரித்துறை உங்களுடைய ரிட்டனை பிராசஸ் செய்யாது.
இந்தியாவில் உங்களுடைய ITR ஐ இ-வெரிஃபை செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன:
ஆதார் OTP:
உங்களுடைய ஆதார் எண்ணை உங்கள் PAN மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருடன் இணைத்து இருக்கிறீர்கள் என்றால், வெரிஃபிகேஷன் செய்ய உங்கள் போனில் பெறப்பட்ட ஒன் டைம் பாஸ்வேர்டை (OTP) நீங்கள் பயன்படுத்தலாம்.
EVC (எலக்ட்ரானிக் வெரிஃபிகேஷன் கோடு): முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட வங்கி கணக்கு, டிமேட் கணக்கு, நெட் பேங்கிங் அல்லது ATMகள் மூலமாகவும் உங்களால் EVC-ஐ உருவாக்க முடியும்.
டிஜிட்டல் சிக்னேச்சர் சர்டிஃபிகேட் (DSC):
இந்த முறை வழக்கமாக நிறுவனங்கள் அல்லது வருமான வரி தொழில்முறை வல்லுனர்களால் பயன்படுத்தப்படுகிறது.
ஒருவேளை 30 நாட்களுக்குள்ளாக நீங்கள் ITR வெரிஃபை செய்யாவிட்டால் என்ன ஆகும்?
-
ITR தகவலை எலெக்ட்ரானிக் முறைப்படி வழங்கி அதனை இ-வெரிஃபை செய்தாலோ அல்லது எலெக்ட்ரானிக் தகவல் பரிமாற்றம் செய்த 30 நாட்களுக்குள்ளாக ITR-V சமர்ப்பித்தால் மட்டுமே நீங்கள் எலெக்ட்ரானிக் தகவல் பரிமாற்றம் செய்த தேதி உங்களுடைய இன்கம் டேக்ஸ் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்ட தேதியாக கருதப்படும்.
-
ஒருவேளை ITR தகவலை எலெக்ட்ரானிக் முறைப்படி பரிமாற்றம் செய்து, ஆனால் 30 நாட்களுக்கு பிறகு அதனை நீங்கள் இ-வெரிஃபை செய்தால் நீங்கள் இ-வெரிஃபை செய்த தேதியே உங்களுடைய வருமான வரி தாக்கல் செய்யப்பட்ட தேதியாக கருதப்படும். அதுமட்டுமல்லாமல் வருமான வரி சட்டத்தின்படி, தாமதமாக ITR தாக்கல் செய்ததற்கான அபராதத்தை செலுத்த வேண்டும். மேலும் நீங்கள் இ-வெரிஃபை செய்ய தவறினால் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தது கட்டாயமாக செல்லுபடி ஆகாது.
-
ஒருவேளை உங்களுடைய ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31, 2024 ஐ தவறிவிட்டால், அதனை டிசம்பர் 31, 2024 -க்குள் செய்யலாம். எனினும் தாமதமாக தாக்கல் செய்வதற்கான அபராதங்களை நீங்கள் செலுத்த வேண்டும்.
-
ஜூலை 31, 2024 க்கு பிறகு டிசம்பர் 31, 2024க்குள் நீங்கள் ITR தாக்கல் செய்யும்பொழுது அதிகபட்சமாக 5000 ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்படும்.
-
உங்களுடைய வருமானம் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் உங்களுக்கான அதிகபட்ச அபராதம் 1000 ரூபாயாக வசூலிக்கப்படும். மேலும் உங்களுடைய மொத்த வருமானம் அடிப்படை விலக்க வரம்புக்கு கீழ் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது.
Also read |
மூத்த குடிமக்களுக்கான FD திட்டம்… எந்தெந்த வங்கிகள் எவ்வளவு வட்டி தருகின்றன? முழு விவரம்!
டிசம்பர் 31, 2024 என்ற தேதியையும் தவறவிட்ட நபர்கள் அடுத்த நிதியாண்டின் மார்ச் 31, 2025 -க்குள் வருமான வரியை தாக்கல் செய்யலாம். ஆனால் இந்த சூழ்நிலையில் நீங்கள் அதிகப்படியான அபராதத்தை செலுத்த வேண்டும். எனினும் நீங்கள் கடைசி தேதியை தவறவிட்டால் அதனை திருத்தி கொள்வதற்கு மேலும் ஒரு வாய்ப்பை பெறுவீர்கள். இதுபோன்ற சூழ்நிலையில் உங்களால் எதனால் நேரத்திற்கு இ-வெரிஃபை செய்ய முடியாமல் போனது என்பதற்கான தகுந்த காரணத்தை வருமானவரித்துறையினரிடம் கோரிக்கை மூலமாக சமர்ப்பிக்க வேண்டும். அந்த காரணம் சரியாக இருக்கும் பட்சத்தில் வருமானவரித்துறை அதனை ஏற்றுக்கொண்டு உங்களை இ-வெரிஃபை செய்வதற்கு அனுமதிக்கும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
