ஆந்திர மாநிலத்தில் வளர்ப்பு நாய் கடித்ததில் மகன் இறந்த சோகத்தில் தந்தையும் உயிரிழந்தது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள எகுவபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நரசிங்கராவ். இவர் போக்குவரத்து ஊழியராக பணியாற்றி வந்தார். அவரது வீட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாய், நரசிங்க ராவின் மகன் பார்கவை கடித்துள்ளது. இதனால் அவருக்கு ரேபிஸ் நோய் பரவி உயிரிழந்துள்ளார். மகன் உயிரிழந்த சோகத்தில் படுத்த படுக்கையானார் நரசிங்க ராவ்.
மகன் உயிரிழப்பில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நரசிங்க ராவ் நேற்று உயிரிழந்துள்ளார். நாய் கடித்ததால் ஏற்பட்ட பாதிப்பில் அடுத்தடுத்து மகன், தந்தை உயிரிழந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
.
- First Published :
&w=750&resize=750,375&ssl=1)
