வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவாவின் அழைப்பின் பேரில்,அமைச்சர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விஜயத்தின் போது, வெளிவிவகார அமைச்சர், ஜப்பானிய பிரதியமைச்சருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவாரென குறிப்பிடப்படுகிறது.
அமைச்சர் அலி சப்ரி, ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி உட்பட பல முக்கிய பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சருடன் அமைச்சின் உயரதிகாரிகளும் பயணிக்கவுள்ளனர்.
The post அமைச்சர் அலி சப்ரி ஜப்பான் பயணம் appeared first on Thinakaran.

