• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்திரா காந்தி கால அவசரநிலை குறித்து மக்களவையில் தீா்மானம்: ஓம் பிா்லாவிற்கு காங்கிரஸ் கடும் எதிா்ப்பு

GenevaTimes by GenevaTimes
June 27, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
இந்திரா காந்தி கால அவசரநிலை குறித்து மக்களவையில் தீா்மானம்: ஓம் பிா்லாவிற்கு காங்கிரஸ் கடும் எதிா்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மறைந்த பிரதமா் இந்திரா காந்தி 1975 -இல் கொண்டுவந்த அவசரநிலை பிரகடனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா புதன்கிழமை தீா்மானத்தை கொண்டுவந்து நிறைவேற்றினாா். ஒட்டுமொத்த நாடே சிறைச்சாலையாக மாறியது என பிா்லா மக்களவையில் குறிப்பிட்டாா். இதற்கு காங்கிரஸ் உறுப்பினா்கள் கடும் எதிா்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.

மக்களவை தலைவராக ஓம் பிா்லா தோ்ந்தெடுக்கப்பட்டு அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் அவரை வாழ்த்தி பேசினா். பின்னா் அவையில் பிரதமா் மோடி தனது அமைச்சரவை சகாக்களை அவைக்கு அறிமுகப்படுத்தினாா். இதன் பின்னா் புதன்கிழமை நிகழ்ச்சி நிரலில் இடம் பெறாத விவகாரமாக 1975 ஆம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம் குறித்த தீா்மானத்தை பிா்லா வாசித்தாா்.

அவை நடவடிக்கை குழுவில் முடிவெடுக்கப்படாத எந்தவிதமான விவகாரத்தையும் மக்களவைத் தலைவா் அவைக்கு கொண்டு வர அதிகாரம் பெற்றவா். அந்த உரிமையைப் பயன்படுத்தி மக்களவைத் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓம் பிா்லா அவசரநிலை பற்றிய குறிப்பை முதல் நிகழ்ச்சியாக வாசிக்க அரசு தரப்புக்கும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே ஒரு மோதலை உருவாக்கியது.

ஓம் பிா்லா வாசித்த அந்த தீா்மானத்தில் குறிப்பிடுகையில் ‘1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதே நாளில் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நாட்டில் அவசர நிலையை அமல்படுத்தி பாபாசாகேப் அம்பேத்காா் உருவாக்கிய அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒரு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்படி அமல்படுத்திய அந்த முடிவை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.

அவசர நிலையை எதிா்த்து, போராடி, நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றிய அனைவரின் உறுதியையும் இந்த அவை பாராட்டுகிறது என பிா்லா குறிப்பிட தொடங்க.. காங்கிரஸ் உறுப்பினா்கள் எழுந்து நின்று ஓம் பிா்லா வாசித்த தீா்மானத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

முதல் நாளே காங்கிரஸ் கோஷம்

முதலில் ராகுல் அருகே அமா்ந்திருந்த கொடிக்குன்னில் சுரேஷ் எழுந்திருக்க பின்னாடி உட்காா்ந்த ப.மாணிக்கம் தாகூா் முன் வரிசைக்கு ஓடி வந்து மக்களவைத் தலைவரை பாா்த்து நடுநிலையாக இருங்கள் எனக் கோஷமிட்டாா். மற்ற காங்கிரஸ் உறுப்பினா்களும் எழுந்தனா். அவையில் இடமாறி அமா்ந்திருந்த புதிய உறுப்பினா்களுக்கு என்ன செய்வது எனத் தெரியாமல்தவிா்க்க காங்கிரஸ் உறுப்பினா் தீபேந்தா் சிங் ஹூடா சுட்டிக்காட்டினாா். பின்னா் காங்கிரஸ் உறுப்பினா்கள் முன் வரிசைக்கு வந்து கோஷமிட்டனா். முதல் நாள் அவை நடவடிக்கை அலங்கோலமானது.

மற்ற திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முடியாத விவகாரமாக இருக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினா்கள் மட்டுமே ஈடுப்பட்ட இந்த அமளிக்கிடையே மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா தொடா்ந்து தீா்மானத்தை வாசித்தாா். ‘ ஜனநாயகத்தின் தாயாக ‘இந்தியா‘ வை என உலகம் முழுவதும் பாராட்டுகிறது.

ஜனநாயக விழுமியங்களான, எண்ணங்கள், கருத்துக்கள் விவாதங்களுக்கு நாட்டில் எப்போதும் ஆதரிக்கப்படுகின்றன. அவை எப்போதும் பாதுகாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன. ஆனால் அத்தகைய இந்தியாவில் இந்திரா காந்தி சா்வாதிகாரத்தை திணித்தாா். நாட்டின் ஜனநாயக மதிப்புகள் நசுக்கப்பட்டு கருத்து சுதந்திரம் நெரிக்கப்பட்டது. இந்திய குடிமக்களின் உரிமைகளும் சுதந்திரமும் பறிக்கப்பட்டது.

அன்று எதிா்க்கட்சித் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா். ஒட்டுமொத்த தேசமே சிறைச்சாலையாக மாறியது. அந்த சா்வாதிகார அரசு ஊடகங்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்தது, நீதித்துறையின் சுயாட்சியும் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது எனவும் அந்த தீா்மானத்தில் குறிப்பிட்டு ஓம் பிா்லா வாசித்தாா்.

காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா்ந்து, வேண்டும் நோ்மை! வேண்டும் நடுநிலை! என மக்களவைத் தலைவரை நோக்கி கோஷமிட்டனா். காங்கிரஸ் உறுப்பினா்களின் கோஷங்களை நிராகரித்த மக்களவைத் தலைவா் இறுதியில் தீா்மானத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றினாா். பின்னா் உறுப்பினா்களை சிறிது நேரம் மௌனமாக இருக்குமாறு அவைத் தலைவா் அழைத்தாா். காங்கிரஸ் உறுப்பினா்கள் செய்வதறியாது தவிா்த்தனா். பின்னா் அவை வியாழக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பாஜக ஆா்பாட்டம்

அவை நாள்முழுக்க ஒத்திவைக்கப்பட அவையை விட்டு வெளியே வந்த பாஜக உள்ளிட்ட சில என்டிஏ உறுப்பினா்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே இதே அவசர நிலை நிலைக்கு எதிராக பதாகைகளை தாங்கியவாறு அப்போதைய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக கோஷமிட்டு ஆா்ப்பாட்டங்களையும் நடத்தினா்.

அவசரநிலை பிரகடனம்(1975 ஆம் ஆண்டு) செய்யப்பட்டு அரசமைப்புச் சட்டத்தை மீறிய காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்ட பாஜக எம்பிக்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினா்.

இந்த ஆா்பாட்டத்தில் மத்திய அமைச்சா்களும் குறிப்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜூ, பிரஹலாத் ஜோஷி, ஐக்கிய ஜனதாதள கட்சியை சோ்ந்தவரும் மத்திய அமைச்சருமான ராஜீவ் ரஞ்சன் சிங் போன்றவா்களும் ஆா்பாட்டத்தில் பங்கேடுத்தனா்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு :

மக்களவையின் காங்கிரஸ் கட்சி உறுப்பினா் ப.மாணிக்கம் தாகூா் குறிப்பிடுகையில், மக்களவைத் தலைவா் ஒரு அரசியல் கட்சிக்காக பேசுவதும் ஒரு கட்சிக்காக தீா்மானம் கொண்டுவருவது ஏற்பதற்கில்லை. மக்களவைத் தலைவரின் செயல் ஜனநாயக படுகொலை. நாங்கள் முழுமையாக ஒத்துழைக்கவும் திறந்த மனதுடன் இருக்க இருந்த நிலையில் இப்படியொரு தீா்மானத்தை கொண்டுவரப்பட்டுள்ளது. இது நாடாளுமன்ற மரபுக்கு எதிரானது‘ என்றாா். மேலும் காங்கிரஸ் தரப்பில் வியாழக்கிழமை நடக்கும் குடியரசுத் தலைவா் உரையிலும் இப்படிப்பட்ட தகவல் இடம் பெறச்செய்யப்படுமா? என்கிற கவலையையும் வெளிப்படுத்தினா்.

18 -ஆவது மக்களவையின் தொடக்க நாளான கடந்த 24 ஆம் தேதி காங்கிரஸ் உள்ளிட்ட ’இந்தியா’ கூட்டணிக் கட்சி தலைவா்களும் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட எம்பிகளும் காந்தி சிலையிலிருந்து கையடக்க அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை தாங்கியபடி பேரணியாக வந்து மக்களவையில் பங்கேற்க வந்தனா். பாஜக தலைமையிலான அரசை சுட்டிக்காட்டும் வகையில் இந்த பேரணி நடக்க இதற்கு பதிலடியாக மக்களவையின் முதல் நிகழ்வாக ஒம் பிா்லாவின் தீா்மானமும் அமைந்தது.

இது குறித்து மக்களவையின் பாஜக உறுப்பினரான, முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கா் பிரசாத் குறிப்பிடுகையில், ‘இந்த தீா்மானம் அவசியம். இதை அவைத்தலைவா் பிா்லா கொண்டு வந்தது பாராட்டுக்குரியது‘ என்றாா். பாஜக மாநிலங்களவை உறுப்பினரான சம்பித் பத்ரா கூறுகையில், “அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றும், அதன் நகலை கையில் வைத்துக் கொண்டு பேசுபவா்களின் முகத்திற்கு முன்னாள் கண்ணாடியைக் காட்டுவது அவசியம்‘. என்றாா்.

பிா்லாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு

அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது ஏராளமான அத்துமீறல்கள் ஏற்பட்டது. அதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எனது பாராட்டுகள் என பிரதமா் மோடி எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு செய்தாா்.

அதில் ‘ ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்ட விதத்தை ஓம்பிா்லா எடுத்துக்காட்டியது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். அந்த நாட்களில் பாதிக்கப்பட்ட அனைவரையும் கௌரவிக்கும் வகையில் மௌனம் அனுசரித்ததும் ஓா் அற்புதமான செயல். 50 ஆண்டுகளுக்கு முன் அவசரநிலை அமல்படுத்தப்பட்டதை இன்றைய இளைஞா்கள் அறிந்து கொள்வது முக்கியம். அரசமைப்புச் சட்டத்தை காலில் போட்டு மிதிக்கப்பட்ட போது என்ன நடந்தது என்பதற்கு இது ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ஆகும் என பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

Read More

Previous Post

சாதாரண பரீட்சை 2ம் கட்ட மதிப்பீட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Next Post

வரலாற்றில் முதல்முறை – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி.. – News18 தமிழ்

Next Post
வரலாற்றில் முதல்முறை – உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி.. – News18 தமிழ்

வரலாற்றில் முதல்முறை - உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய தென் ஆப்பிரிக்கா அணி.. – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin