ராகுல் காந்தி ஐந்து முறை எம்.பி.யாக இருந்துள்ளார், தற்போது மக்களவையில் ரேபரேலி தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அரசியலமைப்பின் நகலை கையில் வைத்துக் கொண்டு அவர் செவ்வாய்க்கிழமை எம்.பி.யாக பதவியேற்றார். தனிப்பெரும் எதிர்க்கட்சியான காங்கிரஸ், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற்றுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களில் பதவியைப் பெறுவதற்கு மக்களவையில் தேவையான 10 சதவீத உறுப்பினர்களைப் பெறத் தவறிவிட்டது குறிப்பிடத்தக்கது.

