உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்படவில்லை.
20 அணிகள் மோதிய உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு, இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முன்னேறின.
விறுவிறுப்பாக நடைபெற்ற சூப்பர் 8 போட்டிகளின் முடிவில், இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதியில் நாளை இரவு 8 மணிக்கு கயானா மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்தையும், டிரினிடாட் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா ஆப்கானிஸ்தானையும் இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு எதிர்கொள்கிறது.
இந்நிலையில் முதல் அரையிறுதியான ஆப்கானிஸ்தான் – தென்னாப்பிரிக்கா மேட்ச்சுக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியா – இங்கிலாந்து மேட்ச்சுக்கு ரிசர்வ் டே இல்லை. இதுவும் இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.
இந்திய நேரப்படி முதல் அரையிறுதி நாளை காலை 6 மணிக்கு தொடங்குவதால், அந்த போட்டியில் மழை குறுக்கிட்டாலும் ரிசர்வ் டே அமைக்கப்பட்டுள்ளது. 2 ஆவது அரையிறுதி, இந்திய நேரப்படி நாளை இரவு 8 மணிக்கு தொடங்குவதால் நேரம் காரணமாக ரிசர்வ் டே அளிக்கப்படவில்லை. ஏனென்றால், 28 ஆம் தேதி வெள்ளிக் கிழமை அன்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி வீரர்கள் பயணத்தில் இருப்பார்கள்.
இதையும் படிங்க –
இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி ரத்தானால் என்ன நடக்கும்? யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள்?
29 ஆம் தேதி இறுதிப் போட்டி பார்படாஸில் சனிக்கிழமையன்று இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது. முன்னதாக இந்தியா அரையிறுதியில் விளையாடும் கயானா மைதானத்தில் மழை பெய்வதற்கு 88 சதவீத வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விளையாட முடியாத அளவுக்கு மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் முதலிடம் பிடித்த அணி என்ற அடிப்படையில் இந்தியா நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று முதல் அரையிறுதியிலும், ரிசர்வ் டே-யிலும் மழை குறுக்கிட்டு ஆட்டம் கைவிடப்பட்டால் குரூப் 2-இல் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா அணி இறுதிப் போட்டிக்கு செல்லும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
