டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை சூரியகுமாரை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் முதலிடம் பிடித்துள்ளார்.
கடந்த 601 நாட்களாக சூரியகுமார் முதலிடம் பிடித்து வந்த நிலையில் தற்போது அவரிடம் இருந்து அந்த கிரீடம் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை சூரியகுமார் வெளிப்படுத்தி வருகிறார்.
இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடைபெற உள்ள அரை இறுதி போட்டியில் அவரது ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி வெளியிட்டுள்ள தர வரிசையில் சூரியகுமார் யாதவ் 842 புள்ளிகள் பெற்றுள்ளார். அவரை விட 2 புள்ளிகள் மட்டுமே கூடுதலாக பெற்று ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தை பிடித்திருக்கிறார்.
மூன்றாவது இடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் பிலிப் சால்ட் உள்ளார். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா அணிக்கு விளையாடி அதன் வெற்றிக்கு பல போட்டிகளில் உறுதுணையாக இருந்தவர்.
இதையும் படிங்க – இந்தியா – இங்கிலாந்து அரையிறுதி போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது… ஏன் தெரியுமா?
ஐசிசி தரவரிசை பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நான்காம் இடத்தை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் பெற்றுள்ளார். ஐந்தாவது இடத்தில் அதே நாட்டைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் உள்ளார்.
இதேபோன்று பவுலர்கள் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் சுழற் பந்துவீச்சாளர் அடில் ரஷீத் 719 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷீத் கான் 681 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
