• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்!

GenevaTimes by GenevaTimes
June 26, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்து தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் இன்று (ஜூன் 26) உத்தரவிட்டது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாக அவரின் இல்லத்தில் சோதனை நடத்தி அமலாக்கத் துறையினர் அரவிந்த் கேஜரிவாலை கைது செய்து திகார் சிறையில அடைத்தனர்.

சிறையில் உள்ள கேஜரிவால் ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

எனினும், அமலாக்கத் துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமீனுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து கேஜரிவால் உச்சநீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், திகார் சிறையில் இருந்த கேஜரிவாலை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

முன்னதாக கேஜ்ரிவாலை கைது செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. அவரை கைது செய்வதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் கேஜரிவாலை கைது செய்தனர்.

தில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நீதிபதி அமிதாப் ராவத் முன்பு சிபிஐ அதிகாரிகள் கேஜரிவாலை இன்று மாலை ஆஜர்படுத்தினர்.

அவரிடம் விரிவான விசாரணை நடத்தவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து அறியவும் சிபிஐ தரப்பில் 3 நாள்கள் அவகாசம் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கேஜரிவாலுக்கு 3 நாள்கள் சிபிஐ காவல் விதித்து உத்தரவிட்டார்.

Read More

Previous Post

சம்பளம் தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு

Next Post

“ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” – சேவாக் | T20 WC | team India must win t20 World Cup for Rahul Dravid says Sehwag

Next Post
“ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” – சேவாக் | T20 WC | team India must win t20 World Cup for Rahul Dravid says Sehwag

“ராகுல் திராவிடுக்காக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டும்” - சேவாக் | T20 WC | team India must win t20 World Cup for Rahul Dravid says Sehwag

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin