சம்பள அதிகரிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நிபுணர் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
சில சம்பள அதிகரிப்பு மற்றும் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் தீர்வு காணப்படவில்லை என்ற நிலையில், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஜனாதிபதி இந்த நிபுணர் குழுவை நியமித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
|
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02
|

