நாம் நினைப்பது போல் சொந்தமாக தொழில் செய்வது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் ஒரு தவறான முடிவு கூட நிறுவனத்தை பல மடங்கு நஷ்டத்திற்கு இட்டுச் செல்லும். இது நம் தொழிலை மட்டுமல்லாமல், வருமானத்தையும் பாதிப்பதாக இருக்கும். இன்று நாம் பார்க்கப்போகும் கதையும் இதுபோன்ற ஒன்றுதான்.
பிரதாப் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் சிஇஓ-வான அமித் குமார் பல கோடி கடன் சுமையில் தத்தளித்து வந்தபோதும், நம்பிக்கை இழக்காமல் இன்று தனது நிறுவனத்தை இந்தியாவின் ஸ்னாக்ஸ் மார்க்கெட்டில் பிரபலமான பிராண்டாக மாற்றியுள்ளார்.
எல்லாரையும் போல் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லாமல் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என தைரியமான முடிவை எடுத்தார் அமித். ரசாயன உறபத்தி தொழில் தொடங்கவே முதலில் முடிவு செய்தார். ஆனால் இந்த தொழில் அவருக்கும் பல நஷ்டங்களை கொண்டுவந்தது. இவர் எடுத்த இந்த தவறான முடிவால் ஒரே வருடத்தில் ரூ.6 கோடி அளவிற்கு கடனில் சிக்கினார். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலும், மனம் தளராத அமித் தன்முன் உள்ள சவால்களை எதிர்கொண்டு தைரியமாக போராடினார்.
இதனையடுத்து 2002-ம் ஆண்டுவாக்கில் இந்தூர் நகரில் தின்பண்டங்களை விற்பனை செய்யும் முடிவை எடுத்தார். இதற்கு உதவியாக தனது சகோதரர் அபூர்வா குமாத் மற்றும் தன்னுடைய நண்பர் அரவிந்த் மேதா ஆகியோரை சேர்த்துக்கொண்டார். ஒருவேளை இந்த தொழில் தோல்வி அடைந்தால் நிச்சயம் உங்கள் பணத்தை திருப்பித் தருவேன் என்ற உறுதிமொழியோடு தனது குடும்பத்திடமிருந்து ரூ.15 லட்சம் வாங்கி தொழிலில் முதலீடு செய்தார். இவர்கள் மூவரும் சீஸ் பால்களை விற்பனை செய்யத் தொடங்கினர்.
இதையும் படிக்க:
மாதந்தோறும் ரூ.12,000 வரை கிடைக்கும்… எல்ஐசியின் இந்த ஓய்வூதிய திட்டம் பற்றி தெரியுமா?
இந்தூரில் உள்ள சிறிய அறையில் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், அமித் குமாரின் மன உறுதியாலும், அயராத உழைப்பாலும், புத்தி சாதூர்யத்தாலும் மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை அதிகரிக்கத் தொடங்கியதும் 2003-ம் ஆண்டு பிராதாப் ஸ்னாக்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கினார். இன்று உருளைக்கிழங்கு சிப்ஸிற்கு பெயர் பெற்ற நிறுவனமாக இது திகழ்கிறது. மிக எளிமையாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று ஸ்னாக்ஸ் துறையில் மிகப்பெரும் நிறுவனமாக வளர்ந்திருப்பதற்கு அமித் குமாரின் அர்ப்பணிப்பே காரணமாகும்.
தொழில் வெற்றிகரமாக செல்லத் தொடங்கியதும் தங்களது நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை நியமித்தனர். 2022ம் நிதியாண்டில் பிரதாப் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் மட்டுமே ரூ.500 கோடியை எட்டியது.
இதையும் படிக்க:
Income Tax | வருமான வரி செலுத்த கடைசி தேதி எப்போது? தவறினால் எவ்வளவு அபராதம்? – முழு விவரம் இதோ
இன்று நாடு முழுவதும் இந்நிறுவனத்திற்கு ஆலைகள் உள்ளன. அதுமட்டுமின்றி பரந்த விநியோக நெட்வொர்க்கும் உள்ளது. இவர்களுடைய நிறுவனத்தின் கீழ் 2,900 டிஸ்ட்ரிபியூட்டர்கள், 168 சூப்பர் ஸ்டாகிஸ்ட் உள்ளனர். தற்போதைய நிலையில் பிரதாப் ஸ்னாக்ஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு மட்டுமே ரூ.23.08 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.2,308 கோடி) ஆகும்.
.
&w=750&resize=750,375&ssl=1)
