இந்த பாடலை தளபதி விஜய் பாடியுள்ளார்.
அவருடன் சேர்ந்து மறைந்த பாடகி பவதாரணியின் ஏ ஐ குரல் பாடியது என்ற தகவல் வெளியானது.நீண்ட நாட்களுக்குப் பிறகு பவதாரணியின் குரலை கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்று பாடலை கேட்ட ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பாடலின் ஒரிஜினலை பாடியவர் யார் என்பது யாரும் அறியாத ஒன்று. அந்த கேள்விக்கான பதில் தற்போது ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. இந்தப் பாடலை பாடியவர் சூப்பர் சிங்கரில் கலந்து கொண்ட பிரியங்கா என்பது தெரிய வந்துள்ளது.
அவரது குரல் தான் பவதாரணியின் குரலாக ஏ ஐ டெக்னாலஜி மூலம் மாற்றப்பட்டுள்ளதாக யுவன் சங்கர் ராஜாவின் இசைக் குழுவில் ஒருவர் பேட்டி ஒன்றில் தகவலை பகிர்ந்துள்ளார்.

