பாராளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கு இணங்க எதிர்வரும் ஜூலை 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
விசேட அமர்வொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதால், அந்த சபை அமர்வில் பங்குபற்றுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு கடந்த (20) நிறைவடைந்து ஒத்திவைக்கப்பட்டபோது எதிர்வரும் (09) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடுமென அறிவிக்கப்படடது. இந்நிலையிலேயே தற்போது பிரதமர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்றத்தின் 16ஆவது நிலையியற் கட்டளையின் பிரகாரம் ஜூலை (02) செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்

