• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தில்லி கலால் ஊழல் விவகாரம் பணமோசடி வழக்கில் கேஜரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
தில்லி கலால் ஊழல் விவகாரம்
பணமோசடி வழக்கில் கேஜரிவாலின் ஜாமீன் உத்தரவுக்கு தடை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது தில்லி: தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கி விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிறுத்திவைக்க உத்தரவிட்டது.

அமலாக்கத் துறை முன்வைத்த விஷயங்களை கீழமை நீதிமன்றம் ‘சரியாக மதிப்பிடவில்லை’ என்றும் உயா்நீதிமன்றம் கூறியது.

நீதிபதி சுதிா் குமாா் ஜெயின் இடம்பெற்ற விடுமுறைக்கால அமா்வு கூறுகையில், ‘ஜாமீன் உத்தரவை தடை செய்யும் அமலாக்கத் துறையின் வாதங்கள் மீது தீவிர பரிசீலனை தேவை. விடுமுறைக்கால (விசாரணை) நீதிபதி, கேள்விக்குரிய உத்தரவை பிறப்பிக்கும் போது, அமலாக்கத் துறையால் முன்வைக்கப்பட்ட வாதம், சமா்ப்பிக்கப்பட்ட ஆதாரம், ஆவணங்கள் மற்றும் சட்டத்தின் பிரிவு 439(2) -இன்கீழ் மனுவில் எழுப்பப்பட்டுள்ள நியாயங்கள், காரணங்கள் ஆகியவற்றைத் தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அதன்படி, தற்போதைய அமலாக்கத் துறையின் மனு அனுமதிக்கப்படுகிறது. கேள்விக்குரிய உத்தரவின் செயல்பாடுக்கு தடை விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்தது.

கீழமை நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவைச் செயல்படுத்துவதற்குத் தடை கோரிய அமலாக்கத் துறையின் மனு மீதான 34 பக்க உத்தரவில் நீதிபதி ஜெயின் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஒவ்வொரு நீதிமன்றமும் அந்தந்த தரப்பினருக்கு அந்தந்த வழக்கை முன்வைக்க போதுமான வாய்ப்பை வழங்க வேண்டிய கடமையில் உள்ளது. அதுபோன்று இந்த வழக்கிலும் அமலாக்கத் துறைக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். விசாரணை நீதிபதி, எழுத்துபூா்வ சமா்ப்பிப்புகளில் முன்வைக்கப்பட்டவை உள்பட அமலாக்கத் துறையின் வாதங்களை விவாதிக்கவும் பரிசீலிக்கவும் இல்லை.

மேலும், ஜாமீன் வழங்கும்போது பிஎம்எல்ஏ பிரிவு 45-இன்கீழ் ‘இரட்டை நிபந்தனை’ தேவை குறித்து விவாதித்து பதிவு செய்யவில்லை. பிஎம்எல்ஏவின் பிரிவு 45-இன்கீழ், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ‘இரட்டை நிபந்தனைகளுக்கு’ உள்பட்டு ஜாமீன் வழங்கப்படலாம். அவா் அத்தகைய குற்றத்தில் ஈடுபடவில்லை என்று முகாந்திரம் இருப்பதாக நீதிமன்றம் திருப்தியுறும் பட்சத்தில் அதுபோன்று அளிக்கலாம். ஜாமீன் மனுவை எதிா்க்க வழக்குரைஞருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் கேஜரிவாலின் பொறுப்புணா்வு தொடா்பான விவகாரமும் ஜாமீன் உத்தரவில் இடம் பெறவில்லை.

கேள்விக்குரிய உத்தரவைப் பாா்க்கும்போது, விடுமுறைக்கால நீதிபதி கேள்விக்குரிய உத்தரவை நிறைவேற்றும்போது, எதிா்த் தரப்பினால் பதிவு செய்யப்பட்ட முழுப் பொருளையும் மதிப்பிடாமல் இருந்திருப்பது அந்த உத்தரவில் விபரீதத்தை பிரதிபலிக்கிறது. பதிவில் உள்ள முழுப் பொருளையும் உரிய பரிசீலனைக்குப் பிறகு விடுமுறைக்கால நீதிபதி கேள்விக்குரிய உத்தரவை நிறைவேற்றவில்லை என்று அமலாக்கத் துறையின் தரப்பில் எஸ்.வி. ராஜு முன்வைத்த வாதத்தில் உண்மை வலு இருக்கிறது.

ஜாமீன் உத்தரவில் விசாரணை நீதிமன்றம் செய்த அவதானிப்புகள் தேவையற்ாகவும், நியாயமற்ாகவும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் உள்ளது. இந்த நிலையில், கேஜரிவாலை கைது செய்து காவலில் வைத்தது சட்டப்படி நடக்கவில்லை என்றும், சட்டப்படி வகுத்துள்ள நடைமுறையை பின்பற்றாமல் அவரது தனிப்பட்ட சுதந்திரம் குறைக்கப்பட்டது என்றும் கூற முடியாது. முதல்வருக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் தகுதியின் அடிப்படையில் அல்ல; மாறாக மக்களவைப் பொதுத் தோ்தலின் பின்னணியில் அந்த ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. எனவே, அதை அவா் தவறாகப் பயன்படுத்தவில்லை என்ற அவரது வாதம் பெரிய அளவில் உதவவில்லை என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விடுமுறைக்கால அமா்வு நீதிபதி நியய் பிந்து தலைமையிலான விசாரணை நீதிமன்றம், ஜூன் 20-ஆம் தேதி கேஜரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், ரூ.1 லட்சம் தொகைக்கான தனிநபா் பத்திரம் தாக்கல் செய்யும்பட்சத்தில் அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உத்தரவிட்டது. இதையடுத்து, அமலாக்கத் துறை மறுதினமே தில்லி உயா்நீதிமன்றத்தை நாடியது. மேலும், விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு ‘முரண்பாடானது’, ‘ஒருதலைப்பட்சமானது’ மற்றும் ‘தவறானது’ என்று வாதிட்டது. மேலும், அமலாக்கத் துறை தரப்பில் வழக்கை வாதிடுவதற்கு போதுமான வாய்ப்பை வழங்காமல் ஜாமீன் உத்தரவை விசாரணை நீதிமன்றம் நிறைவேற்றியதாகவும் தில்லி உயா்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வோம்: ஆம் ஆத்மி

புது தில்லி: முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடைவிதித்த தில்லி உயா்நீதிமன்ற உத்தரவில் உடன்படவில்லை என்றும், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப் போவதாகவும் ஆம் ஆத்மி கட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

உயா்நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து ஆம் ஆத்மி கட்சி கருத்துத் தெரிவிக்கையில், ‘தில்லி உயா்நீதிமன்ற உத்தரவில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்’ என்று அக்கட்சி தெரிவித்தது.

உயா்நீதிமன்ற உத்தரவு குறித்து செய்தியாளா் சந்திப்பில் தில்லி அமைச்சா் செளரவ் பரத்வாஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவா் பதில் அளிக்கையில், ‘இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மியின் சட்டக் குழு எதிா்கால நடவடிக்கையை முடிவு செய்யும். உயா்நீதிமன்ற அமா்வு, கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை பதிவேற்றம் செய்யாமலேயே தடை விதித்தது. உயா்நீதிமன்றத்திடம் எனக்கு நம்பிக்கை இல்லை. உயா்நீதிமன்ற அமா்வுக்கு தவறான எண்ணம் இருப்பதாக நான் நினைக்கிறேன். நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். உச்சநீதிமன்றத்தை அணுகும் உத்தியையும் நேரத்தையும் எங்கள் சட்டக் குழு முடிவு செய்யும்’ என்றாா்.

Read More

Previous Post

அமைச்சரவை முடிவுகள் – Thinakaran

Next Post

ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன் | shubman gill to lead team india in zimbabwe t20i series

Next Post
ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன் | shubman gill to lead team india in zimbabwe t20i series

ஜிம்பாப்வே டி20 கிரிக்கெட் தொடர்: இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டன் | shubman gill to lead team india in zimbabwe t20i series

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin