கோலாலம்பூர்: தற்போதைய அமைச்சரவையில் நிர்வாகத் தகுதி இல்லாத நல்ல அரசியல்வாதிகள் மட்டுமே உள்ளனர் என்ற டாக்டர் மகாதீர் முகமதுவின் கூற்றுக்கு உள்துறை அமைச்சர் சைபுஃதீன் நசுத்தியோன் இஸ்மாயில் கிண்டலான மறுப்பை வெளியிட்டார். பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பிகேஆர் பொதுச் செயலாளரான சைபுஃதீன் முன்னாள் பிரதமரின் கருத்துடன் “ஒப்புக்கொள்வதாக” கூறினார்.
நான் அவருடன் உடன்படுகிறேன். ஏனென்றால் மகாதீர் மட்டுமே இந்த உலகில் மிகவும் திறமையான நபர். நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் இங்குள்ள ராயல் மலேசியன் போலீஸ் கல்லூரியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கிண்டலாக கூறினார். எப்ஃஎம்டிக்கு அளித்த பேட்டியில், பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க முடியவில்லை என்று மகாதீர் கூறியிருந்தார். முன்னாள் பிரதமர் தற்பொழுதைய பிரதமர் அன்வார், அரசியல் பிழைப்பில் அதிக கவனம் செலுத்தி வருவதால் அவர் அளிக்க வேண்டிய தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்றார்.


