• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சுவிட்சர்லாந்து – ஜெர்மனி ஆட்டம் டிரா | யூரோ கோப்பை | switzerland germany match draw euro cup group match

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சுவிட்சர்லாந்து – ஜெர்மனி ஆட்டம் டிரா | யூரோ கோப்பை | switzerland germany match draw euro cup group match
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிராங்க்பர்ட்: யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பிராங்க்பர்ட் நகரில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜெர்மனி – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டத்தின் 3-வது நிமிடத்தில் கார்னரில் இருந்து டோனி குரூஸ் அடித்த பந்தை பாக்ஸ் பகுதியின் மையப்பகுதியில் இருந்த கை ஹேவர்ட்ஸ் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணிக்க முயன்றார். ஆனால், சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் அற்புதமாக தடுத்தார்.

17-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் ராபர்ட் ஆண்ட்ரிச் கோல் அடித்தார். ஆனால் ஜமால் முசியாலா ஃபவுல் செய்ததாக இந்த கோல் மறுக்கப்பட்டது. 28-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி தனது முதல் கோலை அடித்தது. ரெமோ பிரவுலர் உதவியுடன் பந்தை பெற்ற டான் என் டோய் தனது வலது காலால் அடித்த ஷாட் கோல் கம்பத்தின் இடது புறத்தை துளைத்தது. இதனால் சுவிட்சர்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

தொடர்ந்து ஜெர்மனி அணி பல முறை கோல் கம்பத்தை நோக்கி படையெடுத்த போதிலும் பதில் கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால் முதல் பாதியில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். 63-வது நிமிடத்தில் ஜெர்மனியின் டேவிட் ரவும் அடித்த வலுவான ஷாட் கோல் கம்பத்துக்கு மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. 74-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் குவாடோ துவா அடித்த ஷாட் ஜெர்மனி கோல்கீப்பரால் தடுக்கப்பட்டது. 88-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் கிரானிட் ஷாகாவின் கோல் அடிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களின் முடிவில் சுவிட்சர்லாந்து 1-0 என முன்னிலை வகித்தது. இதன் பின்னர் காயங்களுக்கு இழப்பீடாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. இதன் 2-வது நிமிடத்தில் டேவிட் ரவும் அடித்த கிராஸை பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து துள்ளியவாறு நிக்லஸ் ஃபுல்க்ரக் தலையால் முட்டி கோல் வலைக்குள் திணித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. எஞ்சிய நிமிடங்களில் இரு அணிகள் தரப்பில் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.

ஜெர்மனி தனது முதல் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்ததால் ஏற்கெனவே நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. தற்போதைய ஆட்டத்தை டிராவில் முடித்ததன் மூலம் அந்த அணி 7 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்து லீக் சுற்றை நிறைவு செய்துள்ளது.



Read More

Previous Post

“கட்சியை பலவீனப்படுத்த நினைத்தவர்களை மீண்டும் சேர்க்க மாட்டேன்’’ – சரத் பவார் | “Those who wanted to weaken party…”: Sharad Pawar opens up on speculations of return of Ajit Pawar’s MLAs

Next Post

நடப்பாண்டில் இதுவரை 98,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு… அதிர்ச்சி தகவல்!

Next Post
நடப்பாண்டில் இதுவரை 98,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு… அதிர்ச்சி தகவல்!

நடப்பாண்டில் இதுவரை 98,000க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் வேலை இழப்பு... அதிர்ச்சி தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin