தேனி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை தக்காளி 80 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது ரூ.100 க்கு விற்பனையாகி வருகிறது . வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது .
விலை உயர்ந்த தக்காளி :
தமிழகத்தின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக தக்காளி, வெங்காயத்தின் விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு விவசாயிகள் எதிர்பார்த்த விளைச்சல் இல்லாமல் உள்ளது . விளைச்சல் மிகவும் குறைந்துள்ளதால் சந்தைக்கும் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சமீப காலமாக விலைஏற்றம் இல்லாமல் இருந்த காய்கறிகளின் விலை திடீரென உயரத் தொடங்கியுள்ளதால் இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் தக்காளி கிலோ ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டு வருக்கிறது.
தக்காளி விலையைப் போன்று இஞ்சி, வெங்காயம் போன்ற அத்தியாவசிய தேவைகளின் விலையும் திடீரென உயர்ந்துள்ளது. வெங்காயம் கிலோ 60 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரைக்கும் , இஞ்சி கிலோ 150 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 80ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 100 ரூபாய் வரை விற்பனையாகிறது . தேனி மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 100-க்கு விற்பனை ஆகிறது. ஆனால் வெளி சந்தைகளில் தக்காளியின் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய் வரை விற்பனை ஆகிறது . தக்காளியின் விலை உயர்ந்துள்ளதால் இதர காய்கறிகளின் விலையும் கிலோவிற்கு ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
